அன்வர் ராஜா திமுகவிற்கு போன.. சில மணி நேரங்களில் எடப்பாடி செய்த காரியம்.. நிலைமை கைமீறுதே!
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறி அன்வர் ராஜா திமுகவில் திடீரென இணைந்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி மாலை திருவாரூரில் செய்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அன்வர் ராஜா 2001ல் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தமிழக சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர் தமிழக அரசில் இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2014 தேர்தலில் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக பணியாற்றியவர் அன்வர் ராஜா.
அதிமுக மீது இஸ்லாமியர்கள் அப்செட்
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அன்வர் ராஜா, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், சசிகலாவுக்கு ஆதரவு என்றும் சமீபத்தில் தெரிவித்தார். எடப்பாடியை விமர்சனம் செய்யும் விதமாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் வைத்ததையடுத்து, 2021-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 2023ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் இப்போது மீண்டும் அதிமுகவின் பாஜக கூட்டணியை எதிர்த்து திமுகவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. சமீபத்தில் கூட பாங்கு ஓதும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு இஸ்லாமியர்களை இம்ப்ரஸ் செய்ய நினைத்தார். சாரி தெரியாமல் பேசி விட்டேன் என்றெல்லாம் எடப்பாடி கூறினார். அப்படி இம்ப்ரஸ் செய்ய நினைத்த எடப்பாடி டிப்ரஸ் ஆகும் வகையில்.. அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றுள்ளார். இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது.
எடப்பாடி செய்த சம்பவம்
இப்படிப்பட்ட நிலையில் நேற்று அன்வர் ராஜா வெளியேறிய சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருவாரூரில் செய்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. கூட்டத்திற்கு இடையே நிர்வாகி ஒருவர் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா ஒன்றை வழங்கினார். இதை வாங்கி எடப்பாடி பழனிசாமி அணிந்துகொண்டார்.
மக்களுக்கு முன்பாக இதை அணிந்து கொண்டார். அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றுள்ளார். இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்லாமியர்களை கவரும் விதமாக எடப்பாடி பழனிசாமி நேற்று குல்லா அணிந்துகொண்டார். அன்வர் ராஜா சென்ற காரணத்தால்.. அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் தென் மண்டலத்தில் அதிமுக அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் அன்வர் ராஜாவின் முடிவு அதிமுகவிற்கு மேலும் சரிவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications