முடிவுக்கு வந்த தலைவலி .. தேர்தலுக்கு முன்பே எடப்பாடி கைக்குள் வந்த அதிமுக! இனிதான் முக்கிய பிரச்சனை
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் வேறு பாதையில் பயணிக்க தொடங்கிவிட்ட சூழலில், அதிமுகவின் ஒற்றைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்துவிட்டார். இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை கரை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இது அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கொண்டு வரப்பட்ட பின், அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இருந்தனர். அதிலும் ஓபிஎஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. அதேபோல் அதிமுகவை மீட்கப் போகிறேன் என்று ஓபிஎஸ் தனித்து இயங்கி வந்தார். இவருக்கு பாஜகவும் மறைமுகமாக உதவி செய்தது.

3 பேரால் தலைவலி
அதேபோல் அதிமுகவின் வாக்குகளை அமமுக மூலமாக டிடிவி தினகரன் தொடர்ச்சியாக பிரித்து வந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் மட்டும் அதிமுக வேட்பாளர்கள் 23 தொகுதிகளில் தோல்வி அடைய அமமுக காரணமாக அமைந்தது. இன்னொரு பக்கம் சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மூவ்
இதனால் மக்கள் பிரச்சனைகளை விடவும், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் கொடுக்கும் பிரச்சனையை சமாளிக்கவே எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது. ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தார். இதையடுத்து ஜனவரி மாதம் டிடிவி தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டு வர சம்மதம் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ரூட் க்ளியர்
இன்னொரு பக்கம் அதிமுக ஒருங்கிணைப்புக்கு போராடி வந்த சசிகலா, தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து கொடியை அறிமுகம் செய்தார். மறுபக்கம் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வந்த ஓபிஎஸ், தற்போது திடீரென திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் ரூட் கிளியராகி இருக்கிறது. அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைகளுக்கு சென்றுவிட்டது.
எடப்பாடி கைகளில் அதிமுக
அதிமுகவை இனி வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படி ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சாதகம் ஏற்பட்டாலும், இதுவே அவருக்கான அக்னிப் பரீட்சையாகவும் மாறி இருக்கிறது. ஏனென்றால் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. திமுக கூட்டணி இணக்கமாகவும், பலமாகவும் உள்ளது.
கரை சேர்ப்பாரா எடப்பாடி பழனிசாமி?
2வது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். விஜய்யின் வருகை காரணமாக சிறிய அளவிலான வாக்குகளை கூட சிதறக் கூடாது என்று பல்வேறு முடிவுகளை விரைவாக மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.
தனி பாதையில் ஓபிஎஸ், சசிகலா
ஏற்கனவே சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சனையாக இருந்தவர்கள் அனைவருமே அடுத்தடுத்து பல்வேறு பாதைகளை அமைத்துவிட்டனர். இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.
அக்னிப் பரீட்சை
ஒருவேளை எடப்பாடி பழனிசாமியால் மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முடியவில்லை என்றால், அவரின் தலைமையை பலரும் கேள்வி எழுப்ப தொடங்குவார்கள். அதேபோல் அவருக்கு ஆதரவாக இருக்கும் கொங்கு மண்டல நிர்வாகிகளும் கூட விலகுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி இந்தத் தேர்தலில் எப்படியான நகர்வுகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
"ஓபிஎஸ் என்னை கைவிட்டுவிட்டார்!" ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் முக்கிய தகவலை சொன்ன உசிலம்பட்டி ஐயப்பன்? -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications