எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் திடீர் சந்திப்பு.. பின்னணியில் நடப்பது என்ன?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் அன்புமணியை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு பாமகவும் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளும் இணைந்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி தரப்பில் இணைந்து தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அன்புமணி தரப்பு பாமகவுடன் கூட்டணி உறுதியான பின்னர் தான், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார்.

இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவை சமாதானம் செய்யும் நோக்கில் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் ராமதாஸ் தரப்புடன் திமுகவின் சில சீனியர் அமைச்சர்கள் பேசி வந்தனர். ஆனால் ராமதாஸ் தரப்பு பாமகவை திமுக தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், விசிக அந்த கூட்டணியில் இருக்காது என்று திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் இணைக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை. தனியாக போட்டியிட வைத்து பாமக ஆதரவு வாக்குகளை பிரிக்க திமுக திட்டமிட்டது. இதனிடையே அன்புமணியும் ராமதாஸ் தரப்பு பாமகவை என்டிஏ கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால் அதிமுக தரப்பு ராமதாஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கவில்லை.
இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவுக்கு தனித்து நிற்பது அல்லது தவெகவுடன் செல்வது என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு பாமக ஆதரவு எம்எல்ஏ அருள் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவிலான வன்னியர்கள் வசித்து வருகின்றனர். பாமகவை கூட்டணியில் இணைப்பதன் மூலமாக வன்னியர்களின் வாக்குகள் பெருவாரியாக அதிமுக பக்கம் திருப்ப முடியும். இதனால் ராமதாஸ் அணியையும் கூட்டணிக்குள் கொண்டு அதிமுக முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications