Election Exclusive: விட்டதை பிடித்த அன்புமணி..எலக்சனுக்கு முன் எடப்பாடி கொடுத்த கிஃப்ட்! உடனே ஓகே சொன்ன பாஜக! என்னாச்சு?
சென்னை: தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கும் முடிவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தான். மார்ச் 16-ல் மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை ஆனால் அதற்கு முன்னதாகவே அன்புமணி எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை யாருக்கு வழங்குவது என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு ஆகியோரின் பதவிக் காலமும், அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

மாநிலங்களவை தேர்தல்
சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை அடிப்படையாகக் கொண்டால், இந்த ஆறு இடங்களில் நான்கு இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைப்பது உறுதியானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த கணக்கு எளிமையானதாக இருந்தாலும், கூட்டணி அரசியல் அதை சிக்கலாக்கியுள்ளது. காரணம், இந்த இடங்களை தங்களுக்காக ஒதுக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் தான்.
அன்புமணி ராமதாஸ்
அதிமுக தரப்பில், பாமக தலைவர் அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களில் ஒன்றே மீதமிருக்கும் நிலையில், அந்த ஒரே இடத்தை இன்னும் யாருக்கு வழங்குவது என்ற குழப்பம் உருவாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் தங்களுக்கும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக பாமக கூட்டணி
இந்நிலையில் மாநிலங்களவை சீட்டை அதிமுகவிடம் எதிர்பார்த்த தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. இதனால் திமுகவுக்கு கிடைக்கும் நான்கு மாநிலங்களவை எம்பி தொகுதிகளில் ஒன்று தேமுதிகவுக்கு வழங்கப்பட உள்ளது. ஜிகே வாசன் மாநிலங்களவை எம்பி சீட்டு வேண்டாம் 8 சட்டமன்ற தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுக்கு கிடைக்கும் இரண்டில் ஒன்றை அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு வழங்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கும் நிலையில் மற்றொரு சீட்டை அன்புமணிக்கு வழங்க முடிவெடுத்து இருப்பதாகவும், இதற்கு பாஜகவும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி முடிவு
மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வேட்பு மனு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இதற்கு 10 எம்எல்ஏக்களின் முன்மொழிவும் தேவை. அன்புமணி தரப்பில் தற்போது இரண்டு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் 8 அதிமுக எம்பிக்கள் முன்வழிவு படிவத்தில் கையெழுத்திட உள்ளனர். இதற்கெல்லாம் எடப்பாடி ஒப்புக் கொண்ட நிலையில், அன்புமணி விரைவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்கின்றனர். ஏப்ரலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அன்புமணி எம்பியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மண் எடுக்க முடியாத இரண்டு தொகுதிகள்.. ஆச்சர்யம் தரும் வரலாற்று உண்மை!












Click it and Unblock the Notifications