Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: ஓவர் வாய் உடம்புக்கு ஆகாது.. காங்-ஐ கதறவிட்ட ஸ்டாலின்! கதர் கட்சியில் வெடித்த மோதல்! கப்சிப் ஆன ’கை’

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம். அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேமுதிக. திமுக கூட்டணியில் தேமுதிக வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த தேர்தலில் குறைவாக இடங்கள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. சில காங்., நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக பேசியதால்தான் கோபப்பட்டு ஸ்டாலின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வந்து விட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்குள் மோதல் எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி அமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக தேமுதிக எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்தது.

குறிப்பாக அதிமுக அணியுடன் தேமுதிக இணையும் என்ற எதிர்பார்ப்பு பல இடங்களில் பேசப்பட்டது.கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரே நிகழ்வில் பங்கேற்றது இந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK DMDK

2026 சட்டமன்ற தேர்தல்

அதன் பின்னர் தேமுதிக தேசிய ஜனநாயக அணியில் சேரும் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை மாற்றும் வகையில், பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் மூலம் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தேமுதிக கூட்டணி

இந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்து கேட்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். பெரும்பான்மையானோர் திமுக கூட்டணியை விரும்பியதால், அதையே அறிவித்ததாக அவர் கூறினார். தொண்டர்களின் விருப்பமே இறுதி முடிவாக ஏற்கப்பட்டது எனவும் விளக்கினார். மேலும், மறைந்த கருணாநிதி மற்றும் விஜயகாந்த் இடையிலான நீண்டநாள் நட்பு குறித்து அவர் குறிப்பிட்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது பேசப்பட்ட கூட்டணி பல காரணங்களால் அமையாமல் போனது. பல ஆண்டுகள் கழித்து அந்த முயற்சி தற்போது நிறைவேறியுள்ளது என்று அவர் கூறினார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி

இந்த புதிய கூட்டணி அமைப்பு காரணமாக தொகுதி பங்கீடு குறித்து புதிய நிலை உருவாகியுள்ளது. அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, தேமுதிக இணைவு காரணமாக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறைய வாய்ப்பு உள்ளது என்ற கருத்து பேசப்படுகிறது.

காங்கிரஸ் 25 தொகுதி

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை திமுக அதிக தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டால், கூட்டணி கட்சிகளுக்கான இடங்களின் எண்ணிக்கை மாற்றத்துக்குட்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், கூட்டணி அமைப்பில் எந்த கட்சியின் மரியாதையும் பாதிக்கப்படாத வகையில் முடிவு எடுக்கப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்ற விஷயங்கள் குறித்து இரு கட்சிகளும் ஆலோசித்து அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது இருதரப்பிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தரப்பில் ஒருவித பயத்தை உண்டு பண்ணி இருக்கிறது என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். அதாவது தேமுதிக வருகையால் தங்கள் இடங்கள் பாதிக்கப்படும் என்பது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததுதான். முரண்டு பிடித்தால் தங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்ற திமுக தயங்காது என்பதால் சில எம்எல்ஏக்கள் திமுக தரப்புடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

திமுக தலைமை

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் மோதல் வெடித்துள்ளது என்கின்றனர் நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை திமுக காங்கிரஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தது. திமுகவை எதிர்த்து பேச சில தலைவர்கள் ஆரம்பித்த நிலையில் திமுக தலைமையும் கோபமடைந்தது. இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசிய நிலையில் ஸ்டாலின் மௌனம் காத்து வந்தார்.

காங்கிரஸ் உட்கட்சி மோதல்

ஆனால் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு எல்லை மீறியதால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என ஸ்டாலின் வெளிப்படையாக பேசினார். இது டெல்லி தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியினரின் பேச்சாளர் தான் தற்போது திமுக தேமுதிகவை அழைத்து வந்துள்ளது. இதனால் திமுக ஆதரவு எதிர்ப்பு எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளிடையே மோதல் வெடித்திருக்கிறது. விரைவில் அது பொது வெளியிலும் வெடிக்கும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+