Election Exclusive: மாணிக்கம் தாகூர் ரொம்ப உக்கிரமா இருக்காரு! பார்லிமெண்டில் பல்ப் கொடுத்த திமுக! இது தான் காரணமா?
சென்னை: மக்களவையில் ராகுல் காந்தி தொடர்பாக ஏற்பட்ட விவகாரம், தமிழக அரசியலிலும் எதிரொலித்துள்ளது. ஆட்சிய்ல் பங்கு கேட்டு பிரச்சனை செய்து வந்த மாணிக்கம் தாகூர் இப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக திமுக நிற்கவில்லை என பேசியுள்ளது காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்குள் புதிய பிரச்சனையாக மாறியுள்ளது. மதுரை மீட்டிங்கில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்ட கருத்துகள், கூட்டணியில் உள்ள மனக்கசப்பை வெளிப்ஆட்சியில் படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மக்களவையில் ராகுல் காந்தி பேச முயன்றபோது சபாநாயகர் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதில் ஒருவர்கூட திமுக எம்பிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தை எடுத்துக்காட்டி பேசிய மாணிக்கம் தாகூர், "உண்மையாக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்" என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் திமுக
மேலும், "ஆதரவு அளிப்பதாக கூறுவோர் அதேபோல் செயல்படாதது ஏன்?" என்ற கேள்வியையும் எழுப்பினார். அவரது இந்தப் பேச்சு, காங்கிரஸ் தரப்பில் அதிருபியில் உள்ளதை வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் மரியாதை தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், கட்சிக்கு உரிய இடமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. சிலர் கடுமையான எச்சரிக்கை தரும் கருத்துகளையும் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு விதமான மனநிலைகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.
கூட்டணி மனக்கசப்பு
ஒரு தரப்பு திமுகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் எனக் கூற, மற்றொரு தரப்பு மாற்று வாய்ப்புகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கிறது. இதனால் கட்சிக்குள் விவாதம் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியினருக்கு அறிவுறுத்தினார். மேலும், தேசியத் தலைமையுடன் ஆலோசனை நடத்த அவர் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணி
தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் நடைபெற்ற ஆலோசனையில் கூட்டணி நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசியத் தலைமையும் மாநிலத் தலைமையும் திமுகவுடன் கூட்டணியைத் தொடரும் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், சிலர் புதிய அரசியல் கட்சிகளுடன் இணையும் வாய்ப்பை முன்வைத்து பேசுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகம் குறித்து கட்சிக்குள் சிலர் கருத்து தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூரின் கருத்துகளுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஆதரவு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது திமுக தரப்பில் கவனத்துடன் பார்க்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், கூட்டணி உறவை பாதிக்காத வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தியுடன் நெருக்கமாக உள்ளவர் எனக் கூறப்படும் நிலையில், அவரது கருத்துகள் அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு
கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இரு கட்சிகளிலும் ஆலோசனைகள் தொடர்கின்றன. இந்நிலையில், தேர்தல் காலம் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி அமைப்பு குறித்து தெளிவான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், அரசியல் சூழல் மேலும் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவை விமர்சிப்பதற்கான காரணம் குறித்து சில தகவல்களை சொல்லியுள்ளனர் திமுகவினர்.
ராகுல் காந்தி விவகாரம்
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தோடு நடந்த போது ராகுல் காந்திக்கு ஆதரவாக வழக்கமாக திமுக எம்பிக்கள் இருப்பார்கள். ஆனால் இந்த முறை திமுகவினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் ஒருவர் கம்யூனிஸ்ட் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் எம்பி துணை நிற்கும்போது திமுக எம்பிக்கள் துணை நிற்காதது ஏன்? என ராகுல் காந்தியின் அதிருப்தி அடைந்திருக்கிறார். ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளரான மாணிக்கம் தாகூர் அதனை வெளிப்படுத்தும் வகையில் போட்டு உடைத்து விட்டார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications