Election Exclusive: விஷப் பரிட்சை வேண்டாம்ணே.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த விஜய்! கூட்டணிக்கு ‘நோ’ சொல்ல என்ன காரணம்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி மிகப்பெரும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் பேச்சு நடத்தி வருவதாகவும், 51 சீட்டுகள், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல ஆபர்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாஜக கூட்டணி வேண்டாம் என சொல்லிவிட்டாராம் விஜய். அதைத்தான் சிடிஆர் நிர்மல் குமார் வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றனர் தவெகவினர். இந்த நிலையில் இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் என்ன நடந்தது? என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் தற்போது தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விடும். அதற்கு முன்னதாக, கூட்டணியை இறுதி செய்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பாஜக கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது.

ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை பயன்படுத்தி கூடுதல் கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்து வந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அதிமுக பாஜகவின் எண்ணம். சொல்லப்போனால் பாஜக தான் கூட்டணி முடிவுகளை எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக -பாஜக- தவெக
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அதிமுக -பாஜக- தவெக கூட்டணி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக விஜய்க்கு 51 சீட்டுகள்,துணை முதலமைச்சர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஒரு வருடம் முதல்வர் பதவி என பல்வேறு ஆபர்களை அமித்ஷா எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்க்கு அழுத்தத்தை தரும் வகையில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் உள்ளிட்ட விவகாரங்களையும் பாஜக கையில் எடுத்தது.
கூட்டணி பரபரப்பு
இதற்கிடையே டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்காக ஆஜரான நிலையில் பாஜக தலைவர்களை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் இன்று சென்னை திரும்பினார் விஜய். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார் எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. குறிப்பாக பாஜக அதிமுக சசிகலா ராமதாஸ் என யாருடனும் எந்த மட்டத்திலும் பேச்சு நடக்கவில்லை.
பாஜகவுடன் கூட்டணி
காங்கிரஸ் உடன் பேச்சு நடப்பதாகவும் சிலர் வருந்தி பரப்பினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, திமுக இதுபோன்ற தகவல்களை பரப்பி வரும் நிலையில் யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவுடன் விஜய் கூட்டணி பேசியது என்னவோ உண்மைதான் எனவும் ஆனால் சில நலன் விரும்பிகளின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவெடுத்ததாக சொல்கின்றனர்.
விஜய் பாஜக கூட்டணி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தினர்," பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்துவிட்டு அந்த கட்சிய உடனே சென்று கூட்டணி வைத்தால் தன்னுடைய எதிர்காலம் இருட்டாகிவிடும் என நினைக்கிறார். மேலும் இந்த முறை அதிமுக தோற்றால் அதிமுக மேலும் பலவீனமாகும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படிப்படியாக தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று வந்துவிடலாம் என கணக்கு போடுகிறார்.
தவெக தனித்துப் போட்டி
பாஜகவுடன் சேரலாமா என நெருங்கிய நண்பர்கள் முக்கிய நிர்வாகிகள் ரசிகர் மன்ற காலத்தில் இருந்து பயணிக்க கூடிய முக்கியமான நிர்வாகிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டபோது அவர்களின் 75% பேர் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நமக்கு கொள்கையே இல்லை என்றது போல ஆகிவிடும். அதனால் இந்த தேர்தலில் அந்த விஷப் பரிட்சை வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் அந்த முடிவை கைவிட்டு இருக்கிறார்"என்கின்றனர்.












Click it and Unblock the Notifications