Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்.. பாஜகவுடன் ஜோடி போட்ட டிடிவி! பரிதவிக்கும் பன்னீர்செல்வம்! பனையூர் பக்கமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவை நம்பி இருந்த ஓ.பன்னீர்செல்வம் கிரீன் சிக்னல் கிடைக்காமல் பரிதவிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை எடுத்து பனையூர் பக்கம் செல்லலாமா? என யோசித்து வருவதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

2026 தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. இதை அடுத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.

திமுகவை பொருத்தவரை கிட்டத்தட்ட கூட்டணி இறுதி செய்யப்பட்டது போல தான். தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணி மேலும் சில கட்சிகளை அழைத்து வந்து கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க முயற்சித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

O Panneerselvam TTV Dhinakaran AIADMK BJP

அதிமுக பாஜக கூட்டணி

தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணிக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது. இதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரன் அமமுக

இதற்கிடையே டெல்லி சென்ற டிடிவி தினகரன் அமித் ஷாவை சந்தித்ததாகவும் அதிமுக பாஜக கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 10 தொகுதிகள் வரை ஒக்கீடு செய்யப்படலாம் எனவும் தகவல்கள் உலாவுகின்றன. ஆனால் இரு தரப்புமே அதனை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் 2016 தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆதரவாளராக பல ஆண்டுகள் இருந்த ஒ.பன்னீர்செல்வத்தின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது என்கின்றனர்.

ஓ பன்னீர்செல்வம் பரிதாபம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்ம யுத்தம் நடத்தி, அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாஜக கூட்டணியில் சேர்ந்த அவர், தற்போது தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார். கட்சி தொடங்குவதாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொன்னாலும் இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு, கட்சியில் இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். அதே பதில் தான் கூட்டணிக்கும் என சொல்லப்படுகிறது.

தவெக விஜய்

ஓ.பன்னீர்செல்வத்தை எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணியில் சேர்க்க முடியாது என பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜகவை நம்பி தேர்தலில் நின்று இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட நிலையில், தற்போது என்ன செய்வது? என்று தெரியாமல் ஓ பன்னீர்செல்வம் பரிதவிப்பில் இருப்பதாகவும், கோவில் கோவிலாக சுற்றி வருவதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். கடைசி வாய்ப்பாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரலாம் என ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன. விரைவில் இது தொடர்பாக ஆதரவாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என்றும் சொல்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+