போடுங்கண்ணே வெடிய.. ஆதரவாய் வந்த தீர்ப்பு! எடப்பாடி ஹாப்பி அண்ணாச்சி! குதூகலமான அதிமுக தொண்டர்கள்!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவு, எடப்பாடிக்கு சாதகமாக வந்த நிலையில் சென்னையில் அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

எடப்பாடி மேல்முறையீடு
இதனால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு இழுக்க இது ஒரு நல் வாய்ப்பு எனக் கருதி அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அதே நேரத்தில் நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவு எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த பதினெட்டாம் தேதியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

தனி நீதிபதி உத்தரவு ரத்து
இதனால் ஓபிஎஸ் தரப்பு இபிஎஸ் தரப்பு தீர்ப்பு என்னவாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் காலை 10:40 மணியளவில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். அதில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக கூறியுள்ளனர். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் செல்லும் என்பதோடு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கான உத்தரவு செல்லுபடி ஆகி உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொண்டர்கள் உற்சாகம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டு முன் திரண்டு இருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி வீட்டு முன் கூடியிருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி எடப்பாடி வாழ்க என உற்சாக முழக்கம் இட்டு வருகின்றனர். அடுத்தடுத்து தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டு முன் குவிந்து வருவதால் அந்தப் பகுதியே திருவிழா கோலம் கொண்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் என அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு!












Click it and Unblock the Notifications