ஈரோட்டில் செங்கோட்டையன் வந்துதான் திமுகவை காப்பாத்தணுமா? அங்கே முத்துசாமி கெத்தா இருக்காரே: பிரபலம்
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.. இந்நிலையில், செங்கோட்டையனின் அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், "தம்பிதுரையும், செங்கோட்டையனும் கூட்டணியாக உள்ளனர்.. தங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்பதால், தங்களுக்கான இடத்தை தக்க வைக்க வேண்டும் என்று இருவருமே நினைக்கிறார்கள்..

இந்த அரசியல்தான், எடப்பாடிக்கு நெருக்கடியை தருகிறது.,.. ஏற்கனவே செங்கோட்டையனால் பாதிக்கப்பட்டு, 18 நிர்வாகிகள் அவரது கோபி தொகுதியிலிருந்தே வெளியேறியிருக்கிறார்கள்..
செங்கோட்டையன், தம்பிதுரை
செங்கோட்டையனும், தம்பிதுரையும், மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிலாக, மூப்பனாருக்கு மலர்வளையம் வைக்கிற நிர்மலா சீதாராமன் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.. ஏற்கனவே செங்கோட்டையன் மீது அதிருப்திக்குள்ளாகி 18 நிர்வாகிகள் கோபி தொகுதியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்..
செங்கோட்டையன், தம்பிதுரை இருவருக்கும் சொந்த கட்சி கூட்டம் பெரியதா? அல்லது நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் தலைகாட்டுவது இவர்களுக்கு பெரியதா?
வேலையில்லை யாருக்கும்
அதனால்தான் இவர்களை அதிமுக தலைமை அங்கீகரிக்கவில்லை.. இதற்கு பிறகுதான் இன்று 5ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை சந்திக்க போவதாக அறிவித்தார் செங்கோட்டையன்... இப்படி ஏற்கனவே பலமுறை சந்தித்துவிட்டடார்.. செங்கோட்டையன்.. ஒருமுறை டெல்லியில்கூட மீட்டிங் வைத்திருந்தார். ஆனால், அதெல்லாம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு முன்பிருந்த நிலைமை.
இப்போது, அதிமுக-பாஜக இணைந்தாகிவிட்ட நிலையில் செங்கோட்டையனுக்கு வேலையில்லை, டிடிவி தினகரனுக்கு வேலையில்லை.. ஓபிஎஸ்ஸுக்கும் வேலையில்லை, தம்பிதுரைக்கும் வேலையில்லை..
மறந்துவிடுவார்கள் செங்கோட்டையனை
எனவே இவர்கள் தங்களது இடத்தை தக்கவைப்பதற்காகவும், எடப்பாடியை மிரட்டுவதற்காகவும், செய்தியாளர்களை சந்திக்க போவதாக செங்கோட்டையன் சொன்னார்.. ஆனால் செங்கோட்டையன் விஜய் கிட்ட போனாலும்சரி, திமுக கிட்ட போனாலும் சரி, தாய்க்கழகத்திலிருந்து விலகினால், அதிமுக தொண்டர்கள் செங்கோட்டையனை மறந்துவிடுவார்கள்..
செங்கோட்டையனால் அடுத்த தேர்தலில் எ.வ.வேலுவாக மாற முடியாது.. அடுத்த தேர்தலில் கேகேஎஸ்எஸ்ஆராக மாற முடியாது.. எனவே அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதை தவிர செங்கோட்டையனுக்கு வேறுவழியில்லை.. திமுகவுக்கு போனால், அடுத்த எவ வேலு, சேகர் பாபு போல லிஸ்ட்டில் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்..
ஈரோடு திமுகவில் பல செங்கோட்டையன்கள் இருக்கிறார்கள்.. முத்துசாமி அங்கே இருக்கிறார்.. முத்துசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் எந்த காலத்திலும் ஆகாது..
முத்துசாமி, செங்கோட்டையன்
செங்கோட்டையனும், முத்துசாமியும் இருவருமே எம்ஜிஆருக்கு அன்று செல்லப்பிள்ளைகள்.. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா கிட்ட 2 பேரும் வந்தார்கள்.. ஜெயலலிதாவிடமும் இருவரும் நெருக்கமாக இருந்தனர்.. பிறகு முத்துசாமி திமுகவுக்கு வந்துவிட்டார்..
இப்போது திமுகவுக்குள் செங்கோட்டையன் நுழைய வேண்டுமானால், முத்துசாமியின் கிளியரன்ஸ் தேவைப்படும்.. என்ஓசியை ஸ்டாலின்கிட்ட வாங்க வேண்டியிருக்கும்.. செங்கோட்டையனை விடுங்க, நானே கோபியை பார்த்துக்கறேன், கோபியை வெற்றி பெற வைக்கிறேன் என்று முத்துசாமி சொன்னால், முடிந்தது விஷயம்.. அன்று முத்துசாமி, சேகர்பாபு போன்றோர் திமுகவுக்குள் நுழைந்தது ஒரு காலம்.. இன்று அவ்வளவு எளிதாக திமுகவுக்குள் யாராலும் நுழைய முடியாது.
ஈரோட்டில் வலுவாக திமுக
திமுக இன்று வலுவாக உள்ளது.. ஈரோட்டை செங்கோட்டையன் சென்றுதான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைமை திமுகவுக்கு இல்லை.. போதாக்குறைக்கு முத்துசாமி இருக்கிறார்.. சின்னவரின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் இருக்கிறார்.. எனவே திமுகவில் செங்கோட்டையனுக்கு வேலையில்லை.
அப்படியானால் விஜய் கிட்ட போகலாம்.. அங்கே போனால் புஸ்ஸி ஆனந்தை அட்ஜெஸ்ட் செய்யணும். எனவே, எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்த செங்கோட்டையனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை..
பாஜக தன்னை பயன்படுத்தி கொள்ளும் என்று நினைத்தார் செங்கோட்டையன்.. ஆனால், பாஜகவும் எடப்பாடி பழனிசாமியுடன் செட்டிலாகிவிட்டார்கள். அதனால் அங்கேயும் செங்கோட்டையனுக்கு இடமில்லை. எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் எதுக்கு டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கணும்? காவியை வைத்து எடப்பாடியை மிரட்டினால் எப்படி?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications