"தேன்மொழி பேசமாட்டியா.. கடைசிவரை பேசாமலேயே உயிரைவிட்ட சுரேந்தர்!
காதலியை அரிவாளால் வெட்டிய காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: "தேன்மொழி பேசமாட்டியா.. பேசமாட்டியா" என்று கேட்டு கத்தியால் காதலியை குத்திய இளைஞர் தற்கொலையும் செய்து கொள்ள முயன்றார். ஆனால் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேன்மொழி என்ற பெண்ணை, சுரேந்தர் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். எனினும் இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், சுரேந்தரிடம் பேசுவதை தேன்மொழி தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், கடந்த 14 ந்தேதி சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழியிடம் தகராறு செய்ததுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்து பயந்து விட்ட சுரேந்தரும், ரயிலின் முன்விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

படுகாயம்
ஆனால் தேன்மொழி, சுரேந்தர் இருவருமே படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினர். இவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தேன்மொழியை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சுரேந்தரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர்.

தையல்
இருவருக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது. தேன்மொழிக்கு அரிவாள் வெட்டில் தாடை பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டதால், தையல் போடப்பட்டுள்ளது. மேலும் 10 நாளுக்கு பேசவே கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

விசாரணை
அதேபோல, சுரேந்தருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ரயிலில் விழுந்தது முதல், அவருக்கு சுயநினைவே இல்லை. இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டே வந்தது.

சுயநினைவு
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேந்தர் உயிரிழந்தார். தேன்மொழியை ஏன் கொலை செய்ய முயற்சிக்க வேண்டும், இருவருக்கும் என்னதான் தகராறு நடந்தது, என்ற விவரத்தை அறியவே முடியவில்லை.. சுயநினைவு இல்லாமலேயே சுரேந்தருக்கு உயிரும் பிரிந்து விட்டது!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications