Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாசாமி ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஏ.வ.வேலு. இவர் மீது வரி ஏய்ப்பு புகார் பெறப்பட்டதன் காரணமாக, அவரின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல், வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை உட்பட 40 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

EV Velu house IT Raid: IT raid on Appasamy Real Estate, Casagrand companies

சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ. வேலுவிற்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக எ

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பிரபலமான கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ஒன்று. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அந்நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளருமான அப்பாசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததை அடுத்து அவரது மகனின் தலைமையில் கீழ் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

1950 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்த நிறுவனம் அப்பாசாமி ரியல் எஸ்டேட். சென்னையில் 1960களிலேயே அடுக்குமாடிக் குடியிருப்பை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிறுவனத்தை சேரும். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தனது ரியல் எஸ்டேட் மூலம் நகரங்களையும் உருவாக்கியது அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம்.

1990ஆம் ஆண்டுகளில் ரெசிடன்சி க்ரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் என்ற பெயரில் ஹோட்டல்களையும் கட்ட ஆரம்பித்தார். இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் உள்ள பல ஹோட்டல்கள் அப்பாசாமி நிறுவனத்திடம் உள்ளன. இதுவரை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மட்டுமே மொத்தம் 12 குடியிருப்புச் சொத்துகளும், ஏழு வணிகச் சொத்துகளும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ளன. இதோடு சென்னை, புதுச்சேரி மற்றும் கோவையில் ரெஸிடன்சி டவர்களும் இந்நிறுவனத்தின் பெயரில் உள்ளன.

ரியல் எஸ்டேட் துறையில் இன்றளவும் முக்கிய நிறுவனமாக அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் உருவாக்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்தால்தான் சென்னையில் இன்று பல இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இன்றைய தினம் தி.நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர் வீட்டிலும் அவரது அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

இதேபோல சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் பெற்றது தொடர்பாக ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது பற்றி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+