சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறந்துடாதீங்க.. நம்ம முதல்வரே இளைஞரணியில் இருந்து வந்தவர் தான்! சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நிறைவுபெற காரணம் - முதலமைச்சர் ஸ்டாலின்

    இந்தியாவில் முதல்முறையாகச் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. கடந்த ஜூலை 28இல் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடந்தது.

    இந்தப் போட்டிகளில் உலகெங்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. திமுக எம்.எல்.ஏ.வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளி தோழன்நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. திமுக எம்.எல்.ஏ.வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளி தோழன்

     செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் மூன்று அணிகளும் பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் கலந்து கொண்டன. கடந்த செவ்வாய்க்கிழமை உடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்தது. இதில் அணிகள் பிரிவில் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெண்கல பதக்கம் வென்றன. அதேபோல தனிநபர் பிரிவிலும் இந்தியா சில பதக்கங்களை வென்றது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலான நிகழ்ச்சிகள் இடம் பெற்று இருந்தன.

    பாராட்டு

    பாராட்டு

    அதேபோல நிறைவு விழா நிகழ்ச்சிகளும் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. நிறைவு விழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி படம் மட்டுமின்றி அதிமுக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படமும் இடம் பெற்று உள்ளது. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆளும் கட்சித் தலைவர்களின் படங்கள் மட்டுமே இடம் பெறும். ஆனால், இதில் ஜெயலலிதா படமும் இடம் பெற்ற நிலையில், இதனைப் பலரும் வெகுவாக பாராட்டினர்.

     திமுக பயிற்சி பாசறை

    திமுக பயிற்சி பாசறை

    இந்தச் சூழலில் செஸ் ஒலிம்பியாட் குறித்து சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். சென்னையில் திராவிடமாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

     செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்

    அப்போது பேசிய அவர், "செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. பொதுவாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யப் பல மாதங்கள் ஆகும். ஆனால், நாம் மிகக் குறைந்த நாட்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைச் செய்து முடித்துள்ளோம். மார்ச் மாசம் தான் போட்டி சென்னையில் நடைபெறும் என்பது உறுதியானது. அதன் பின்னர் சில மாதங்களில் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளது.

     பாசறை கூட்டங்கள்

    பாசறை கூட்டங்கள்

    இளைஞரணியை வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை குறைந்தது 100 தொகுதியில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து இதுபோன்ற கூட்டங்களை நடத்த வேண்டும். அதிக கூட்டம் சேர வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும். 100 பேர் கூடினாலும் போதும், தொடர்ந்து பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்துங்கள். விருப்பம் உள்ளவர்களைக் கொண்டு கூட்டங்களை நடத்துங்கள். அதுவே போதும்.

    இளைஞரணி

    இளைஞரணி

    இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி, தற்போது இருக்கும் முதல்வரும் கூட இளைஞரணியில் இருந்து வந்தவர் தான். நன்றாக உழைப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அங்கீகரிக்கப்படுவார்கள்" பயிற்சிப் பாசறை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    Even Tamilnadu CM is from youth wing says DMK leader Udhayanidhi Udhayanidhi latest speech in dmk function: (செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின்) Udhayanidhi praises Tamilnadu govt for chess olympiad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X