"யார் அவர்?".. 6+1.. எகிறும் ஸ்டாலின் இமேஜ்.. "ஜாயிண்ட்" ஆகும் மெகா புள்ளி?.. விழிக்கும் அதிமுக

கொங்குவை பலப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அதிரடியில் இறங்கி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமல்ல, எம்பி தேர்தலுக்கும் சேர்த்து முக ஸ்டாலின் ஸ்கெட்ச் போட்டு வருகிறார்.. கொங்குவில் திமுகவை பலப்படுத்த, தொடர்ந்து தீவிரம் செலுத்தி வரும்நிலையில், மேலும் சிலர் திமுகவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது திமுக.. மேலும் 30 இடங்களில் வென்றிருக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் எண்ணம்..

அதிலும் கொங்குவில் 20 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இப்போது ஸ்டாலினுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

 கொங்கு

கொங்கு

காரணம், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.. இதற்கான காரணங்கள் என்ன? யார் காரணம்? பின்னணி என்ன? என்பது குறித்தெல்லாம் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றாலும், வரப்போகும் தேர்தலில் தனது முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின்.

திமுக

திமுக

இதில் ஒருபகுதியாகத்தான் கொங்குவில் திமுகவை பலப்படுத்த செந்தில்பாலாஜி மூவ்-களை ஆரம்பித்தார்.. அமைச்சரும் முடிந்த அளவு கொங்குவை வளைத்து, மாஜிக்கள், அதிருப்தியாளர்கள், சீனியர்கள், மாற்று கட்சியினர் என தன்னால் இயன்ற அளவுக்கு புள்ளிகளை அழைத்து வந்து கொண்டிருக்கிறார்... இதைதவிர திமுக - அமமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலர்களை தொடர்பு கொண்டு, திமுகவில் இணைக்கும் முயற்சியில் செந்தில்பாலாஜி தொடர்ந்து வருகிறார்.

 கவுண்டர்

கவுண்டர்

இந்நிலையில் இன்னொரு முக்கியமான தகவல் கசிந்து வருகிறது.. கொங்குவில் பிரதானமாக கவுண்டர் சமுதாய வாக்குகளும் இருப்பதால்தான், கவுண்டர் சமுதாய புள்ளிகளையே திமுக இதுவரை குறி வைத்து வந்திருக்கிறது.. தோப்பு வெங்கடாசலம், அமமுக பழனியப்பன், சேலம் அமமுக மாவட்ட செயலர் வெங்கடாசலம் என்று பலரும் இதே ரூட்டில்தான் திமுகவுக்குள் வந்துள்ளனர்.

 எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள்

இப்போது மேலும் 6 மாஜி எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராகி விட்டார்களாம்.. அதுமட்டுமல்ல, ஒரு முன்னாள் அமைச்சரும் திமுகவுக்கு வருவதற்கு ஓகே சொல்லி உள்ளாராம்... இவர்கள் அனைவருமே கவுண்டர் சமுதாய புள்ளிகள் ஆவார்கள்.. ஒருவேளை இவர்கள் திமுகவுக்கு வரும்பட்சத்தில், திமுக சறுக்கலை சந்தித்த கொங்குவின் குறிப்பிட்ட 2 மாவட்டங்களில், 2 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் வீதம் பதவிகளை வழங்கவும் திமுக திட்டமிட்டு வருகிறதாம்.

ஊழல்

ஊழல்

ஒருவேளை ஊழல் புகார்களை திமுக அரசு தூசி தட்டி எடுத்து வரும் நிலையில், அதில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரைதான் திமுக ஸ்கெட்ச் போட்டுள்ளதா தெரியவில்லை. ஆனால், நாளுக்கு நாள் கொங்குவில் திமுக காலூன்றி வரும் நிலையில், அதிமுக கரைந்து கொண்டிருப்பது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+