பிளானே வேற.. ராஜேந்திர பாலாஜியை கைது செய்வது திமுக அரசின் நோக்கமே இல்லைங்க.. பரபரக்கும் பழ.கருப்பையா
சென்னை: பண மோசடி புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு தனிப்படைகள் தேடி வரும் நிலையில், இது தொடர்பாகப் பழ. கருப்பையா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக அறியப்படும் பழ. கருப்பையா, இதுவரை இல்லாத கட்சிகளே இல்லை எனச் சொல்லலாம். காங்கிரஸ், ஜனதா தொடங்கி திமுக, அதிமுக வரை அனைத்து கட்சிகள் உடனும் இணைந்து பயணித்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு அரசியல் ஆலோசகர் என்ற பதவி கொடுக்கப்பட்டிருந்தது.

பழ கருப்பையா
கடந்த செப். மாதம், மநீம-வின் அரசியல் ஆலோசகராக இருந்தும் கமல்ஹாசன் இதுவரை தன்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று கூறி கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இந்தச் சூழ்நிலையில், பண மோசடி புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு தனிப்படைகள் தேடி வரும் நிலையில், இது தொடர்பாகப் பழ. கருப்பையா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கைது செய்வது நோக்கம் இல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திரைப்பட தயாரிப்பாளருமான பழ. கருப்பையா, "செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன் போலவே ராஜேந்திர பாலாஜியும் திமுகவிற்கு வந்துவிட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதுள்ள வழக்குகளைக் கண்டு கொள்ளாமல், ராஜேந்திர பாலாஜியை விரட்டுவது வேடிக்கையானது. ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்யும் நோக்கம் திமுக அரசுக்கு இல்லை. அவரை ஓட ஓட விரட்டி பார்க்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாக உள்ளது.

சசிகலா
பாஜகவை நீக்கி சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொண்டால், திமுகவிற்கு மிகப் பெரிய நெருக்கடி கொடுக்க முடியும். இதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். ஜெயலலிதா இருந்த போதே சசிகலாவை வைத்துத்தான் அதிமுகவின் அனைத்து விதமான செயல்பாடுகளும் நடந்தன. அப்படியிருக்கும் போது தற்போது சசிகலாவை யார் என்று அக்கட்சியினரே கேட்பது கேலிக்கூத்தானது" என்றும் அவர் கூறினார்.

ராஜேந்திர பாலாஜி புகார்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே 2 புகார்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் மேலும் 3 பேர் புகார் அளித்தனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய இதுவரை மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் ஜாமீன் பெறுவதற்கு முன்னதாக கைது செய்ய வேண்டும் என போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

லுக்அவுட் நோட்டீஸ்
மேலும், சமீபத்தில் தான் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் அளிக்கப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பழ கருப்பையாவின் இந்தப் பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்?












Click it and Unblock the Notifications