கோவை உள்பட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி: பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவை தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.

ஆனாலும் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கோவை உள்பட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கோவை உள்பட சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இப்பணிகளுக்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதில் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம். 2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்












Click it and Unblock the Notifications