மாஸ்.. சென்னையில் டிரைவரே இல்லாத ரயில் ஓடப்போகுதாமே.. 3 ரூட்டில் 138 ரயில்கள்.. மெட்ரோவின் அதிரடி
சென்னை: திடுதிப்பென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை சாதித்தும் காட்டியிருக்கிறது சென்னை மெட்ரோ நிறுவனம்.. இந்த நடைமுறையானது, பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னையில் மெட்ரோவின் தேவையும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாகி வருகிறது.. தற்போது 2 வழித்தடங்களில், அதாவது சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகின்றன.

மெட்ரோ அறிவிப்பு: எனினும், மெட்ரோவின் பயன்பாடுகள் அதிகம் உள்ளதால், சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.), கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் (44.6 கி.மீ.) என 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மெட்ரோ நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டதாக என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது.. அதாவது 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 946 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
வழித்தடங்கள்: அதனைத் தொடர்ந்து, கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்க மீண்டும் அதே நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், சென்னை பூவிருந்தவல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் இந்த மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.. 2-ம் கட்ட திட்டத்தின்படி, 3 வழித்தடங்களிலும், பணிகள் முடிந்ததும், டிரைவர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த ரயில்களிலும், தலா 3 பெட்டிகளை கொண்டிருக்குமாம்..
பெட்டிகள்: இந்த 3 பெட்டிகள் கொண்ட 36 ரயில்களை தயாரிக்கவே, அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதன்மூலம், அந்த நிறுவனம் 108 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கும். டிரைவர் இல்லாத ரயில் என்பதால், பாதுகாப்பு அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது..
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "2-ம் கட்ட திட்டத்தில் 116.1 கி.மீ. தூரத்துக்கு பணிகளை முடித்து 2028-ம் ஆண்டில் ரயில்களை இயக்கும்போது, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை எளிதாக கிடைக்கும். கட்டணமும் நியாயமானதாக இருக்கும்.. பயணிகளும் விரைவாக பயணிக்க முடியும்..
கூடுதல் வசதிகள்: பயணிகளின் தேவைக்கேற்ப, 3 அல்லது 6 பெட்டிகளுடன் இயக்கப்படும். பயணிகளுக்கான இடவசதி, கூடுதல் சிசிடிவி கேமராக்கள், செல்போன், லேப்டாக் சார்ஜிங் வசதிகள் இருக்கும். ரயிலில் 2 பக்கமும் பிரத்யேகமாக அகலமான எமர்ஜென்சி கதவுகள் அமைக்கப்படும்...
ரயில்கள் இயக்கத்துக்கு "சிபிடிசி" (Communications-based train control system) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க இந்த தொழில்நுட்பம் வாய்ந்த சிக்னல் கண்டிப்பாக தேவைப்படுகிறது.. இநத் ரயில் 80 கி.மீ. வேகத்தில் செல்வதுடன், அதிகபட்சமாக 90 விநாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications