விவாகரத்து வழக்கு! தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு முக்கிய உத்தரவிட்ட குடும்ப நீதிமன்றம்
சென்னை: பரஸ்பரம் விவாகரத்து கோரிய நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார்.

அவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பங்களில் இருந்தும் பச்சைக்கொடி காட்ட, கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் பிரிந்து உள்ளதாக பதிவிட்டனர்.
தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டதாகவும் ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை ரத்து செய்து என அறிவிக்க வேண்டும் கோரியுள்ளனர்.
இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications