பிரபல நடிகை ஆர்த்தி ஒரே போடு.. 6 மணிக்கு மேல அந்த நடிகர் வெளியே வருவதில்லை.. யாரை சொல்றாரு தெரியுதா?
சென்னை: திருவண்ணாமலையில் அரசியல் களம் திடீரென சூடுபிடித்துள்ளது.. நடிகை ஆர்த்தி கணேஷின் எதிர்பாராத வரவு யாருக்கு பலன் தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.. வந்தவாசி தொகுதியில் அவர் நடத்திய இந்த பிரச்சாரம் தேர்தல் முடிவையே மாற்றுமா என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.. குறிப்பாக தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை, ஆர்த்தி கணேஷ் மறைமுகமாக விமர்சித்தது பலரது கவனத்தை பெற்று வருகிறது.

பிரபல நடிகை ஆர்த்தி கணேஷ்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கர்.. அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர். இவரது தந்தை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தந்தையின் மறைவு குறித்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் ஆர்த்தி பகிர்ந்திருந்தார்..
அடையார் தொல்காப்பியர் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது எதேச்சையாக முதல்வரைச் சந்தித்ததாகவும், தான் முன்பு அதிமுகவில் இணைந்து செயல்பட்டது குறித்த குற்றஉணர்வுடன் தயங்கி நின்றபோது, முதல்வர் தானாக முன்வந்து நலம் விசாரித்ததோடு "என்னை திட்டியது எல்லாம் முடிந்துவிட்டதா?" என கலைஞர் பாணியில் நகைச்சுவையாகக் கேட்டதாகவும் ஆர்த்தி தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
சைக்கிளில் வந்த நடிகர்
ஆரம்பத்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து, 2024-ல் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டவர் ஆர்த்தி கணேண்.. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து நடிகை ஆர்த்தி கணேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், "தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகை அது இலவச தொகை கிடையாது. மக்களின் உரிமை தொகையாக முதல்வர் வழங்கி வருகிறார்.
ஆனால் இங்கு எதிர்க்கட்சியாக பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு உள்ள அதிமுக 10 வருட ஆட்சியில் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. தற்போது வந்தால் மட்டும் அவர்களால் என்ன செய்ய முடியும், ஒன்றும் செய்ய முடியாது. இதையெல்லாம் தவிர்த்து ஒரு நடிகர் களத்தில் இறங்கி உள்ளார். அவர் தற்போது தான் சைக்கிள் ஓட்டவே கற்றுக் கொண்டுள்ளார்.
6 மணிக்கு மேல வெளியே வராத நடிகர்
அரசியலில் ராக்கெட், பிளைட் ஓட்ட காலம் பிடிக்கும். ஆனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு தமது முகத்தை காட்டி விட்டால் ஓட்டு கிடைக்கும் என முகத்தை மட்டும் காட்டி வருகிறார். அதாவது சினிமாவில் காலை 6மணிக்கு சூட்டிங் எடுத்து மாலை 6 மணிக்கு முடிந்து விடும். அதுபோல இவர் ஷூட்டிங் என நினைத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் வருவதில்லை. ஒரு படத்தில் கவுண்டமணிக்கு 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அது மாலைக்கண் நோயாக இருக்கும். அதுபோல இவருக்கு ஏதோ ஒன்று என நான் நினைக்கிறேன்" என்றெல்லாம் பேசினார்..
நடிகை ஆர்த்தி பேச பேச, அங்கிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி வரவேற்றனர்.. இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications