சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீனா அசந்துட்டாராமே.. "கண்ணால பார்த்தேன்.. விஜயகாந்த் சார், அதுவும் அந்த அயிரை மீன்".. செம்ம தேமுதிக

விஜயகாந்த் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுவது குறித்து மீனா புகழ்ந்து பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் குறித்த 2 வீடியோக்கள் இணையத்தில் திடீரென ஷேர் ஆகி வருகிறது.. வழக்கமாக நடிகர்கள் வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்வது இயல்பு என்றாலும், தேமுதிக தொண்டர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆகி வருவதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. இதற்காக தேசிய கட்சிகள் களமிறங்கி உள்ளன.. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் தங்கள் வியூகங்களை கையில் எடுத்துள்ளன.

அந்தவகையில் தேமுதிகவும் புது ரத்தம் பாய்ச்சி மீண்டு(ம்) வருகிறது.. இதனிடையே, அக்கட்சி தொண்டர்கள் விஜயகாந்த்தின் வீடியோக்களை இணையத்தில் அடிக்கடி பதிவிட்டும் வருகிறார்கள்.

ஓசி பயணம்னு எப்படி சொல்லாம்! பெண்களே அவங்களுக்கு பயத்தை காட்டணும்.. டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்ஓசி பயணம்னு எப்படி சொல்லாம்! பெண்களே அவங்களுக்கு பயத்தை காட்டணும்.. டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்

 நடிகை மீனா

நடிகை மீனா

அந்தவகையில், ஒரு தனியார் டிவிக்கு நடிகை மீனா முன்பு ஒருமுறை பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசியதை மட்டும் தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். மீனா அதில் பேசியதாவது: "வானத்தை போல" ஷூட்டிங்கின்போதுகூட ஒரு சம்பவம் நடந்தது.. எப்போதுமே விஜயகாந்த் சார் ஷூட்டிங் என்றால், மதுரை பக்கத்தில் இருந்து நிறைய ரசிகர்கள் திரண்டு வருவார்கள்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே பஸ் பஸ்ஸாக கிளம்பி வருவார்கள்.. ஊரில் இருந்து வரும்போதே மீன்குழம்பு எடுத்து வருவார்கள்.. அயிரை மீன்குழம்பு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

 இலை சாப்பாடு

இலை சாப்பாடு

'மரியாதை' பட ஷூட்டிங்கும் காரைக்குடியில் நடந்து கொண்டிருந்தது.. ஒருநாள் பிரேக் நேரத்தில், கேப்டன் சாப்பிட கூப்பிடுவதாக சொன்னார்கள்.. அதற்கு நான், "எனக்கு சாப்பாடு வந்துவிட்டது.. கேரவனிலேயே வைத்து சாப்பிட்டு விடுகிறேன், பரவாயில்லை" என்றேன்.. ஆனாலும், யூனிட்டில் அனைவரையும் விஜயகாந்த சார் அழைத்து வர சொன்னார்.. உங்களையும் கூட்டிட்டு வர சொன்னார் என்றார்கள்.. சரி என்று சொல்லி, அங்கே போய் பார்த்தேன்.. ஷூட்டிங் நடந்தது ஒரு பெரிய வீடு.. அந்த வீட்டில் ஹாலில், யூனிட்டில் உள்ள எல்லாரும் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள்..

 நடிகை அம்பிகா

நடிகை அம்பிகா

விக்ரமன் சார், அம்பிகா மேடம் முதல் லைட் பாய் வரை எல்லாரும் அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள்.. எல்லாருக்குமே இலை சாப்பாடு.. அதில் ஏராளமான சாப்பாடு அயிட்டங்கள் இருந்தன.. அதை பார்த்ததுமே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு.. எல்லாருக்கும் ஒரே சாப்பாடுதான் போடுவார் விஜயகாந்த்.. நான் நேரிலேயே இதை கண்ணால் பார்த்தேன்.. 25, 30 சாப்பாடு அயிட்டம் இருந்திருக்கும்.. இப்படியெல்லாம்கூட சாப்பாட்டில் இருக்குமா? என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.. விஜயகாந்த் சார் சாப்பிட வைத்து அழகு பார்ப்பதை அன்றுதான் நான் கண்ணால் பார்த்தேன்" என்று பூரித்து சொல்கிறார்.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

கடந்த 2017-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஈரோடு அருகே சாலையோரமாக நின்றபடி மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.. அந்த வீடியோவையும் தொண்டர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.. அப்போது, ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த் பிரேமலதாவுடன் கலந்துகொண்டார்.. பிறகு அங்கிருந்து சென்னிமலை வழியாக, மதுரைக்கு காரில் சென்றார். மதியம் 2.30 மணியளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென விஜயகாந்த்துக்கு பசி எடுத்தது.. அதனால், காரை சாலையோரமாக நிறுத்த சொல்லி, அங்கிருந்த தென்னை மர நிழலில் நின்றபடி, காரின் பானட் பகுதியில் வாழை இலை போட்டு, பிரேமலதாவை சாப்பாடு பரிமாறச் சொன்னார்..

 ஹவுஸ் ஓனர்

ஹவுஸ் ஓனர்

தன்னுடன் வந்த தேமுதிக நிர்வாகிகளையும் அங்கேயே சாப்பிடும்படி விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.. அனைவரும் அங்கேயே நின்றபடி சாப்பிட்டுள்ளனர்.. இதனை அவ்வழியே சென்ற மக்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்து கொண்டே சென்றார்கள்.. அதுமட்டுமல்ல, விஜயகாந்த் நின்றிருந்த இடத்தின் அருகே உள்ள அந்த வீட்டின் ஓனர் இதனை பார்த்ததும் திக்குமுக்காடிப்போய்விட்டார்.. உடனடியாக விஜயகாந்தை, தன்னுடைய வீட்டுக்குள் வரும்படி அழைக்கவும் விஜயகாந்த்தும் அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்..

ஈரமனசு

ஈரமனசு

அப்போது முருகேஷ் என்ற விவசாயியின் வறுமை பற்றி அந்த ஓனர் சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டு வருத்தப்பட்ட விஜயகாந்த், உடனடியாக முருகேஷையும் நேரில் சந்தித்து, அவருக்கு பொருள் உதவியையும் தந்துவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.. இந்த சம்பவம் 5 வருடங்களுக்கு முன்பேயே வீடியோவாக வெளிவந்திருந்தது.. இப்போது மீண்டும் விஜயகாந்த் ரசிகர்கள் இதை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, அரசியலில் எத்தனையோ பேர் வெற்றியடைந்துள்ளனர், தோல்வியடைந்துள்ளனர்.. ஆனால், ஒரு "மனிதராக" என்றுமே பேசப்பட்டு வருகிறார் ஈரமனசுக்காரர் விஜயகாந்த்..!!

English summary
Famous Actress Meena praises DMDK Leader Vijayakanths humanity, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X