சமுத்திரகனி ஆபீசுக்குள்.. மிட்நைட்டில் வந்த பெண் யார்.. மிஸ்ஸான மெயின் மேட்டர்.. கடைசியில் பார்த்தால்
சமுத்திரகனி அலுவலகத்தில் நுழைந்து மழைகோட் திருடியுள்ளார் ஒரு பெண்
சென்னை: பிரபல தமிழ் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட டைரக்டர் சமுத்திரக்கனி, தவிர்க்க முடியாத நடிகராகவும் திரையுலகில் வலம் வருகிறார்.. விசாரணை படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றவர்..
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்தி அசத்தியும் வருகிறார்.

மதுரவாயல்
இப்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் 'துணிவு' உட்பட பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்... இவரது ஆபீஸ், மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம், அஷ்டலெட்சுமி நகரின் 10வது தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அதாவது நள்ளிரவில் சமுத்திரகனி ஆபீசுக்குள் ஒரு பெண் அத்துமீறி நுழைந்துள்ளார்..

ரெயின் கோட்
அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி படுத்துள்ளார்.. சிறிது நேரம் தூங்கியிருக்கிறார்.. சென்னையில் சமீப நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அந்த காரின் மீது, ரெயின் கோட் ஒன்று காய வைக்கப்பட்டிருந்தது.. அந்த மழை கோட்டை எடுத்து உடுத்திகொண்டு, அங்கேயே படுத்து தூங்கிவிட்ட அந்த பெண், அதற்கு பிறகுதான், அவராகவே அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்..

மழை கோட்
அந்த பெண், அணிந்து கொண்டு போன ரெயின்கோட், சமுத்திரகனியுடையதாம்.. இவையாவும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.. சமுத்திரக்கனியின் ஆபீசில் மேனேஜராக இருப்பவர் கார்த்திக் 45 வயதாகிறது.. மறுநாள் காலை யதேச்சையாக சிசிடிவியை பார்த்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக மானேஜருக்கு தகவல் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போய், மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடியுள்ளார் கார்த்திக்..

மிட்நைட் திருட்டு
நடந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும், சமுத்திரகனி ஆபீசில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.. எதேச்சையாக இந்த ஆபீசுக்குள் அந்த பெண் நுழைந்துவிட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? நள்ளிரவில் இந்த ஆபிசுக்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்தது.. அந்த பெண்ணின் நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளின் முடிவில், அந்த பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளதாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications