"டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
சென்னை: "பேசும்போது அடுக்கு மொழிகள் இல்லை... ஆனால் அவைகள் அர்த்தம் செறிந்ததாக இருந்தது... மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆனால், ஆழமான சிந்தனையை தருவதாக அமைந்திருந்தது" என்று நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி மேற்கொண்ட பிரச்சாரத்தை புகழ்ந்து, பெருமை பாராட்டியிருக்கிறது திமுக.
இந்த முறை மக்களவை தேர்தலை எதிர்கொள்ள திமுக பல்வேறு வியூகங்களை முன்கூட்டியே வகுத்திருந்தது.. குறிப்பாக, உதயநிதியை முன்னிலைப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்ளவும் திமுக மேலிடம் தயாரானது.

அதாவது, திமுகவினருடன் விவாதிப்பது, திமுகவின் வேட்பாளர்களை தேர்வு செய்வது, தேர்தல் செலவு விவகாரங்கள், பிரச்சார வியூகங்கள் என கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து கொள்ளும் பொறுப்புகளை உதயநிதியிடமே வழங்கலாம் என்றும், அவைகளை எதிர்கொள்ள, உதயநிதியால் மட்டுமே முடியும் என்றும், அறிவாலய தரப்பு நம்பியதாம்..
டார்கெட்: அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் மேலிட பாஜகவுக்கு உதயநிதி தரும், பதிலடிகள், மக்களை வெகுவாக சென்றடைவதாகவும் நம்பப்பட்டது. எதிர்பார்த்தபடியே, உதயநிதியின் பிரச்சார ஃபோகஸ் முழுவதும் மேலிட பாஜகவை வைத்தே டார்கெட் செய்யப்பட்டது.
கடந்த தேர்தலில் "ஒற்றை செங்கல்" வியூகமானது, டெல்லியை எரிச்சலூட்டியது.. அதுபோல இந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்திலும், "29 பைசா" வியூகம், உதயநிதிக்கு நிறையவே கை கொடுத்ததாக சொல்கிறார்கள்.
பிரதமர்: தன்னுடைய பேச்சில் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும்போது, 29 பைசா என்று பிரதமரையும் மறக்காமல் விமர்சித்தார் உதயநிதி.. இதற்காகவே, ஒரு பெரிய வெள்ளை பேப்பரில், 29 காசு படத்தினை பெரிதாக வரைந்து வைத்து கொண்டார்.. ஒவ்வொரு தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம், வெள்ளை பேப்பரை எடுத்து, பொதுமக்களுக்கு உயர்த்தி காட்டி, 29 பைசாவுக்கு விளக்கமும் தந்து வந்தது, பொதுமக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்தது.
தொண்டர்களிடம் இயல்பாக பேசுவது, பொதுமக்களிடம் எளிமையாக உரையாடுவது என இப்படி இன்னும் எத்தனையோ வியூகங்களை உதயநிதி பிரச்சாரங்களில் முன்னெடுத்த நிலையில், திமுகவே இதை வியந்து பாராட்டியிருக்கிறது. உதயநிதியை பாராட்டியே ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
திமுக பாராட்டு: திமுக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரச்சார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. இதை பத்திரிகைகள் கூறுகின்றன. ஊடகங்களின் விவாதங்களிலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரம் ஒரு பேசும் பொருளாகியது.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தின்போது கூடியிருந்த மக்கள் "Pindrop Silence" என்பார்களே, அந்த அமைதியுடன் நின்றபடியே கேட்டு ரசித்தனர். அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் அமைதியாகக் கேட்டு கைதட்டி மகிழ்ந்தது. இறுதி வரை கலையாமல் அவருடைய பேச்சைக் கேட்டது.
அடுக்குமொழி: மற்றொரு முக்கியச் சிறப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு எளிமையான தமிழில் அமைந்திருந்தது. அடுக்கு மொழிகள் இல்லை. ஆனால் அர்த்தம் செறிந்ததாக இருந்தது. மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆழமான சிந்தனையைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் மக்கள் ரசித்தனர். கட்டுக்கோப்புடன் கேட்டு மகிழ்ந்தனர்.
கருணாநிதி போன்றே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு கருணாநிதி அவர்களை நினைவுபடுத்துவதாகவே அமைந்தது. கலைஞர் அவர்கள் எந்த ஊரில் பேசினாலும் - அந்த ஊரில் கழகம் வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார். அதைக் தொண்டர்கள் நம் பெயரை நினைவில் வைத்து நம்மைப்பற்றிக் கூட்டத்தில் பேசுகிறாரே தலைவர் என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள். கலைஞர் மீது மாறாத பாசத்துடன் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னிலும் வேகமாகத் தொடர்வார்கள்.
திமுக ஒரு இரும்புக்கோட்டையாகத் திகழ்வதற்கு கலைஞரின் இந்தப் பேச்சுத்தன்மை ஒரு முக்கியக் காரணம். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்தப் பிரச்சாரத்தில் காண முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சுத் தமிழிலேயே பேசினார். அந்தந்தப் பகுதிகளின் கட்சித் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைத்து உரிமையுடன் பேசினார்.
வீடுகள்: தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். தொண்டர்களும் கலைஞர் அவர்களைப் போலவே, தொண்டர்களுடன் நம் உதயா கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக் கொண்டார்கள்.
மற்ற தலைவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்
குக்கிராமங்கள்: முதலமைச்சர் அவர்கள் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரச்சார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசியுள்ளார்.
ஒவ்வொரு பிரச்சார இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் எனச் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடிப் பிரச்சாரம் செய்துள்ளார்.
பெண்கள்: இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் திமுக தொண்டர்களையும் சந்தித்துள்ளார். இதில் அதிகமான பெண்கள் திரண்டு வந்து அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் 24 நாட்களில், 8,465 கி.மீ. பயணம் செய்து, 38 மாவட்டங்களில், 122 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி 24 நாட்களில் 7,720 கி.மீ. பயணம் செய்து, 33 மாவட்டங்களில் 55 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார். பாஜகவின் அண்ணாமலை 20 நாட்களில் 3,264 கி.மீ.பயணம் செய்து, 18 மாவட்டங்களில் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
மிகப்பெரிய ஆதரவு: உதயநிதி ஸ்டாலினின் நேரடி மக்கள் சந்திப்பும் பொதுமக்களிடம் யதார்த்தமாக பழகிய விதமும், அவர்களிடமே கேள்விகள் கேட்டுப் பதில்கள் தந்த விதமும் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய புகழையும், திமுகவுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை.
எனவே, எல்லா வகையிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக நிறைவேற்றி மக்கள் மனதில் பத்திரிகை ஊடகங்களில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றதில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பிரச்சார யுக்தி நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகும். தமிழ்நாட்டின் இந்த தேர்தல் வெற்றி வருங்காலத்தில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாகத் திகழும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications