"காலிஸ்தானி.. ஜிஹாதி.. மாவோயிஸ்ட்".. விவசாயிகளை விமர்சித்த பாஜக தலைகள்.. வைரலாகும் பழைய கமெண்ட்ஸ்
சென்னை: விவசாய போராட்டம் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் கடந்த காலங்களில் தெரிவித்த கடுமையான சில கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி விவசாய சட்டங்கள் மூன்றையும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக 3 விவசாய சட்டங்களை எதிராக போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தில் 750க்கும் விவசாயிகள் பலியானார்கள். இதனால் அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்கள் வைக்கப்பட்ட நிலையில் விவசாய சட்டங்களை வாபஸ் பெற போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாய சட்டங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதனால் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுகிறோம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடும் கருத்து
இந்த நிலையில் பாஜக தலைவர்கள் பலர் இந்த முடிவை வரவேற்று இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் விவசாய போராட்டங்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் பலர் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். விவசாய போராட்டத்தையும், விவசாயிகள் குறித்தும் கடுமையான சில கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் மீண்டும் இந்த நேரத்தில் வைரலாகி வருகின்றன.

வைரல்
பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியா விவசாய போராட்டங்கள் குறித்து பல முறை விமர்சனம் செய்துள்ளார். அவர் தெரிவித்த கருத்து ஒன்றில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கடந்த நவம்பர் 23, 2020லேயே விவசாய சட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அமல்படுத்த தொடங்கிவிட்டது. ஆனால் இப்போது காலிஸ்தானிகளும், மாவோயிஸ்டுகளும் இதை எதிர்க்கிறார்கள். இதை தனது அரசியல் லாபத்திற்காக கெஜ்ரிவால் பயன்படுத்தி டெல்லியை கொழுத்த பார்க்கிறார்.. இந்த போராட்டம் விவசாயம் பற்றியது இல்லை.. இது அரசியல், என்று அமித் மால்வியா நவம்பர் 23, 2020ல் இந்த போராட்டம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

குண்டர்கள்
கடந்த அக்டோபரில் பாஜக தேசிய செயலாளர் சத்யகுமார் செய்த ட்வீட்டில், உத்தர அப்பிரதேசத்தில் போராடுபவர்கள் விவசாயிகள் கிடையாது. விவசாயிகள் என்ற போர்வையில் குண்டர்கள் போராட்டம் மூலம் வன்முறையை தூண்ட பார்க்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஜிஹாதிகள், காலிஸ்தானிகள். இது எல்லாம் திட்டமிடப்பட்டு நடக்கிறது, என்று கடந்த சில மாதங்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார்.

மனோகர் லால் கட்டர்
பாஜகவை சேர்த்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்த கருத்தில், இந்த போராட்டம் சில தேவையற்ற நபர்களால் நடத்தப்படுகிறது. இதை காலிஸ்தானியர்கள் ஆதரிக்கிறார்கள். அதோடு இந்திராகாந்திக்கு நேர்ந்தது மோடிக்கு நேராத என்றும் இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்படுகிறது. இவர்களை பற்றி எங்கள் அரசு விசாரித்து வருகிறது, என்று விவசாயிகள் குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கடந்த வருடம் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பியூஸ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சில மாதங்களுக்கு முன் தெரிவித்த கருத்தில், இந்த போராட்டத்தில் இருப்பது விவசாயிகள் கிடையாது. இதில் இடதுசாரிகளும், மாவோயிஸ்டுகளை ஊடுருவிட்டனர். இவர்கள் எல்லோரும் தேச விரோதிகள். கைது செய்யப்பட்ட தேச விரோதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இப்போது நடப்பது விவசாயிகள் போராட்டமே கிடையாது, என்று விவசாயிகள் குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.

ரவி சங்கர் பிரசாத்
முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடந்த வருடம் தெரிவித்த கருத்தில், இவர்கள் எல்லோரும் விவசாயிகள் கிடையாது. கலவரத்தை உண்டாக்கும் துக்டே துக்டே கேக்கை சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் பாவம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வருகிறார்கள். இதனால்தான் விவசாயிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எதிரிலும் வெற்றி ஏற்படவில்லை, என்று குறிப்பிட்டு இருந்தார்.

அஜய் குமார் மிஸ்ரா
மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா லக்கிம்பீர் கலவரதத்திற்கு பின் தெரிவித்த கருத்தில், இந்த விவசாய போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் என்னை வந்து சந்திக்க வேண்டும். அவர்களுக்கு இரண்டு இரண்டு நிமிடத்தில் பாடம் எடுப்பேன். அடக்கமாக இருக்க இரண்டு நிமிடத்தில் கற்றுக்கொடுப்பேன். நான் வெறும் எம்பி, அமைச்சர் கிடையாது. நான் அமைச்சர் ஆகும் முன் எப்படி இருந்தேன் என்று நெருக்கமானவர்களுக்கு தெரியும்.
Recommended Video

சவால்
நான் சவால்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்த போராட்டக்காரர்கள் எல்லாம் லக்கிம்பீரை விட்டு வெளியேற வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார். விவசாய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர்கள் சிலர் கடந்த காலங்களில் தெரிவித்த இந்த கடுமையான கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications