இந்த ஒரு ஐடி கார்டு இருந்தால் போதும்.. வங்கி கணக்கில் வரும் ரூ.2000.. எப்படி பெறுவது? செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க 1 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு விவசாய ஆதார் ஐடி உருவாக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளை அடையாளம் காணும் விதமாக.. அவர்களுக்கு முறையாக நலத்திட்டங்கள் சென்று சேர்வதை கணக்கிடும் விதமாக இந்த ஆதார் ஐடி உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தின் இனி வரும் தவணையை பெற ஐடி கார்டு அவசியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

narendra modi pm kisan

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-KISAN திட்டம், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) முறையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படுகிறது.

ஏற்கனவே ஜூலை மாதம் நடந்த நிகழ்ச்சியின் போது, ​​கிரிஷி சாகி ஒருங்கிணைப்பு திட்டத்தின் (KSCP) கீழ் 30,000 க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களில் (SHGs) பெண்களுக்கு 'கிருஷி சாகிஸ்' என்ற சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார். ஜனவரி மாதத்திற்கான தொகை இந்த வாரம் வழங்கப்பட உள்ளது.

பணம் வழங்கிய மத்திய அரசு: மொத்தமாக சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

பயன் உள்ள திட்டம்: இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட உள்ளது.. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட நிதி மூலம், PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2019 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயி குடும்பங்களை பணம் சென்றடைந்துள்ளது.

யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பதை எளிதாக சில கிளிக் மூலம் சோதனை செய்ய முடியும்.
ஐடி அவசியம்: ஆனால் ஜனவரி மாதத்திற்கு பின் வழங்கப்படும் தொகைகளை வாங்க ஐடி கார்டு அவசியம் என்று விதி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு விரைவில் விவசாயிகளை பதிவு செய்யத் தொடங்கும் என்று வேளாண் செயலர் தேவேஷ் சதுர்வேதி தெரிவித்தார்.

இதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும், அக்டோபர் முதல் வாரத்தில் இந்த திட்டத்தின் அமலாக்கம் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து கோடி விவசாயிகளை பதிவு செய்வதே மத்திய அரசின் இலக்கு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆதார் போன்ற தோற்றம் கொண்ட அடையாள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கு பின் வழங்கப்படும் பிஎம் கிஷான் தொகைகளை வாங்க ஐடி கார்டு அவசியம் என்று விதி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எப்படி சோதனை செய்வது?: இந்த திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதற்கான திட்ட விண்ணப்பத்தை நிரப்பி, அதில் இணைய வேண்டும். அதேபோல் உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு இல்லாமல் உங்கள் போன் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரி இந்த திட்டம் மூலம் உங்களுக்கு இந்த பணம் கிடைத்திருக்கிறதா என்று பார்க்க பின்வரும் வகையில் சோதனை செய்ய வேண்டும்.

ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.

ஸ்டெப் 2: லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.

ஸ்டெப் 3: அங்கே உள்ள "Beneficiary Status" என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.

ஸ்டெப் 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.

ஸ்டெப் 5: அந்த பக்கத்தில் "Get Data" என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.

ஸ்டெப் 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+