படத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு!
படத்தில் மட்டுமே சிலர் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள், நடிகர் சூர்யா போல சிலருக்கு துணிச்சல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: படத்தில் மட்டுமே சிலர் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள், நடிகர் சூர்யா போல சிலருக்கு துணிச்சல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது தமிழகம் முழுக்க வைரலாகி உள்ளது. பாஜக கட்சியை சூர்யாவின் கருத்து கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளது.
புதிய கல்விக்கொள்கையில் நிறைய குளறுபடுகள் இருக்கிறது. ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து புகார்களை அடுக்கி இருந்தார். மிக தெளிவாக, நியாமான கேள்விகளை அவர் முன் வைத்து இருந்தார்.

என்ன ஆதரவு
இவரின் இந்த கருத்திற்கு தற்போது நடிகர்கள், இயக்குனர்கள் என்று சினிமா உலகமும் ஆதரவு தெரிவித்துள்ளது . தற்போது தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்து வருகிறது. பாரதிராஜா பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

என்ன ஆதரவு
இதில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள் எல்லோரும் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி உள்ளது.

என்ன சொன்னார்
சீமான் தனது பேச்சில், தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதற்கு என்னுடைய முழு ஆதரவும் இருக்கிறது. அவர் மிக சரியாக பேசி இருக்கிறார். மிக தைரியமாக அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏன் வேண்டும்
அவரின் முழு பேச்சையும் நான் கேட்டேன்.நடிகர் சூர்யாவின் பேச்சு பாராட்டுதலுக்கு உரியது. அவரிடம் இருக்கும் துணிச்சல் வேறு சிலருக்கு இல்லை. அதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். சிலர் எல்லாம் படத்தில் பஞ்ச் டயலாக் பேசினால் மட்டும் போதாது. வெளியில் வந்தும் பேச வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications