பிடிஆர் கூட்டத்தில் பங்கேற்காதது தப்புதான்.. இந்தா ஆரம்பிச்சுட்டாரு ஜெயக்குமார்
பிடிஆருக்கு அறிவுறுத்தி ஜெயக்குமார் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்".. என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்து, மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், கடந்த 17-ம்தேதி, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

பிடிஆர்
இதுகுறித்து செய்தியாளர்கள் பிடிஆரிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அமைச்சர் பிடிஆர் சொல்லும்போது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிக தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், 10-ம் தேதிக்கு மேல்தான் தகவல் சொன்னார்கள். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்த விஷயங்களும் தாமதமாக தந்தார்கள்..

நிகழ்ச்சிகள்
அதற்குள் எனக்கு வேறு நிகழ்ச்சி வந்துவிட்டது.. ஒரு வளைகாப்பு போக இருக்கிறோம்... மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் முடியாது.. அனைத்து மாநில நிதியமைச்சர்களும் 100% நேரடியாக வருகை தந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை 10 நாட்களுக்கு முன்பு வந்து சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

அண்ணாமலை
பிடிஆர் தந்த இந்த விளக்கத்தை பாஜக தரப்பு ஏற்கவில்லை.. குறிப்பாக, மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இதை பற்றி சொல்லும்போது, "பிடிஆர் சொன்ன அந்த காரணத்தை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது... வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் செல்லவில்லை என்று சொல்வாரா நம் தமிழ்நாட்டுக்கு நிதியமைச்சர்? இதிலிருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

பாஜக
செப்டம்பர் 2ம் தேதியே லக்னோவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்ட நிலையில், போதிய அவகாசம் இல்லை என்கிறாரே.. பிறகு லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறாரே, பிறகு சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறாரே" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
— DJayakumar (@offiofDJ) September 21, 2021 |
ஜெயக்குமார்
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதுகுறித்து விமர்சித்துள்ளார்.. "தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பொதுமக்கள் - வணிகர்கள் - ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

தம்பி பிடிஆர்
ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்தது இல்லை.. நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்".. என்று ஜெயக்குமார் கடிதம் வாயிலாக தன் கைப்பட எழுதி அதில் கையெழுத்தும் பதிவிட்டுள்ளார். இதை தன்னுடைய ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications