இந்த 2 ஸ்டேஷனுக்கு போறீங்களா? முதன்முறையா சென்னையில் அதிரடி.. முதலுதவிக்காக ஓடிவந்த ரயில்வே.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், பயணிகளின் நன்மைக்காக புதிய அதிரடி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.. முதல்முறையாக ரயில்வே ஸ்டேஷனில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம், மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

பயணிகளின் வசதிக்காகவே புதுப்புது அறிவிப்புகளையும், வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அமல்படுத்தியவாறே உள்ளது.. இதில், சென்னையை பொறுத்தவரை பொதுப்போக்குவரத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் அதிகமாகவே இருந்து வருகிறது.. மாநகர பஸ்கள் பல இயக்கப்பட்டாலும் ரயில்கள் பொதுப்போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகிறது.

railway stations central

சென்னை ரயில்கள்: சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து, வேலை நிமித்தமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில்களால் பயனடைந்து வருகிறார்கள்.. அதனால்தான், பராமரிப்பு பணிகள் என்று வந்துவிட்டால், ரயில் பயணிகள் அத்தனை பேரும் அந்த ஒருநாளிலேயே திணறிவிடுகிறார்கள்.

அந்தவகையில், தற்போது சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.. சென்னையிலேயே அதி முக்கிய ரயில் நிலையங்களாக சென்டிரல் ஸ்டேஷனும், எழும்பூர் ரயில் நிலையங்களும் விளங்கி வருகின்றன.. எனவே, இந்த ரயில் நிலைய பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனை: அந்த வகையில், ரயில்வே நிர்வாகம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இதய பிரச்சனைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது...

எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷனில், பிளாட்பாரம் 4-ல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட மொத்தம் 6 இடங்களில் இந்த நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. சென்டிரல் ரயில்வே ஸ்டேஷனில் 7 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.

உடனடி சிகிச்சை : AED என்று சொல்லப்படும் தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட்டர் (Automated external defibrillator) என்ற கருவி, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் இதய துடிப்பை சரிசெய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த கருவியை முதல்கட்டமாக சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வைத்துள்ள நிலையில், இதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்காக ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது... இந்த கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கும் வரும் என்று தெற்கு ரெயில்வே தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+