தமிழ்நாட்டுக்கே ஹேப்பி.. நாட்டிலேயே இதுதான் முதல்முறை.. சென்னை ஐசிஎப் ஆச்சரியம்.. வாவ் "1000" சாதனை
சென்னை: மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை... இதனால் ஐசிஎப்-க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது?
உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனமாக, சென்னை ஐசிஎப் திகழ்ந்து வருகிறது. வருடத்துக்கு சராசரியாக, 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை, 71,000 ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

அண்டை நாடுகள், சிறிய நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று 14 நாடுகளுக்கு, ரயில் பெட்டிகளை ஐசிஎப் ஏற்றுமதி செய்கிறது. வந்தே பாரத் ரயில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளது.. பாதுகாப்பு, வேகம், வசதி, செயல் திறன் ஆகியவற்றில் வந்தே பாரத் ரயில் முதலிடத்தில் உள்ளது.
வந்தே பாரத்: எனவேதான், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்பட்டு வருகின்றன..
இதுபோலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தடுத்த வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, சேவைகளையும் தொடங்கி உள்ளன... அடுத்த 5 வருடங்களில் வந்தே பாரத் ரயில், 100 சதவீதமும் இந்தியாவில் தயாராகும் என்றே தெரிகிறது.
புதிய ரயில் பெட்டிகள்: சமீபத்தில், ஐசிஎப் ஒரு சாதனையை வெளியிட்டிருந்தது.. அதாவது, இந்தியாவிலேயே முதல் முறையாக 'புஷ்-புல் ரேக்' எனப்படும் நவீன வசதி கொண்ட புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 2 பக்கங்களிலும், முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்றிருக்கின்றன. 2 என்ஜின்கள் இருப்பதால், இந்த ரயிலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும்.
ஏசி இல்லாத 22 பெட்டிகள், 3 அடுக்கு தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகள், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் என அனைத்துமே இந்த ரயிலில் தயாராகி உள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.. பயணிகளின் போக்குவரத்துக்கு வசதியாக நீண்ட தூர வழித்தடங்களில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
சாதனை: இந்நிலையில், இன்னொரு சாதனையை ஐசிஎப் நிகழ்த்தியிருக்கிறது.. முதல்முறையாக, ஒரே ஆண்டில், 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
அந்தவகையில், இந்த 2023 - 24 உற்பத்தி வருடத்தை எடுத்துக் கொண்டால், நேற்று வரை 1,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதனால், நாட்டிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த சாதனையை ஐசிஎப் படைத்துள்ளது.
சபாஷ் பாராட்டு: இதில், வந்தே பாரத் ரயில்கள், மின்சார ரயில்கள், நெடுந்தொலைவு மின்சார ரயில்கள், தானியங்கி ஆய்வு ரயில்கள், தானியங்கி விபத்து உதவி ரயில்கள் உள்ளிட்டவற்றுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு புதிய சாதனையை ஐசிஎப் ஊழியர்கள், அதிகாரிகளை, ஐசிஎப்-ன் பொது மேலாளர் சுப்பாராவ் மனதார பாராட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications