மட்டன் சாப்பாடு.. ஆட்டுக்கால் சூப் குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் சொன்ன அதிர வைக்கும் தகவல்
சென்னை: கெட்டுப்போன ஆட்டுக்கால்களை போட்டு சமைத்து பின்னர் அதை, கெட்டுப்போன பொருள் என்று கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் மசாலா உடன் சேர்க்கப்பட்டு, கொதிக்க வைத்து வேகவைத்த பின்னர் அதை கண்டுபிடிக்க முடியாது. இதில் எங்கு பிரச்சனை குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ் குமார் இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறுகையில், "கெட்டுப்போன ஆட்டுக்கால் விவகாரம் எங்களுக்கு புதுசாக இருக்கிறது.. 10 நாட்களுக்கு முன்பு பார்த்தோம் என்றால், சென்னை எழும்பூரில் 1700 கிலோ ஆட்டுக்கறிகளை நாஙகள் பிடித்தோம். அப்படி பிடித்த போது, நாங்கள் அவர்களிடம் எங்கேயே எல்லாம் சப்ளை செய்தீர்கள் என்று விசாரித்து சேகரித்தோம். அப்படி நாங்கள் கண்டுபிடித்த இடங்களை தினமும் தேடி சென்ற போது தான், இந்த கெட்டுப்போன ஆட்டுக்கால் இருந்த இடம் பற்றி தெரிய வந்தது. குறிப்பிட்ட நிறுவனம் சென்னை முழுக்க ஆட்டுக்கால்களை மட்டுமே சப்ளை செய்து வந்திருக்கிறார்கள்..

உடனே எங்களுக்கு சந்தேகம் வந்ததால், அந்த இடத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து சென்றோம். அங்கு சென்று பார்த்த போது தான், அது மிகவும் தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது, மாதக்கணக்கில் சேமிப்பதாக கூறினார்கள். நீங்கள் எங்களை ரெய்டு நடத்திய பிறகு, ஓட்டல்கள் எங்களிடம் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள் என்று கூறினார்கள். நான் அந்த இடத்தை நான்கு நாட்களுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன்.
பொதுவாக ஆட்டுக்கால்களை பொறுத்தவரை நமது வீடுகளிலும் இருக்கும். உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு சூப் வைத்து கொடுப்பார்கள். அதை உப்புக்கண்டம் என்று சொல்வோம்.. அதை உப்பு போட்டு, மஞ்சள் போட்டு, டிரையாக வெயிலில் காய வைத்திருப்போம்.. அப்படி செய்யும் போது, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் இருக்காது.. இல்லை, உப்புக்கண்டம் செய்யப்படாத ஆட்டுக்கால் என்றால் மைனஸ் 18 டிகிரிக்கு கீழ் இருக்கக்கூடிய டிரை பீரிசல் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், கண்டிப்பாக குடலுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதேநேரம் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை போட்டு சமைத்து பின்னர் அதை, கெட்டுப்போன பொருள் என்று கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் மசாலா உடன் சேர்க்கப்பட்டு, கொதிக்க வைத்து வேக வைத்த பின்னர் அதை கண்டுபிடிக்க முடியாது.. இதில் எங்கு பிரச்சனை என்றால், பாதி வேகவைத்த பின்னர் சாப்பிடும் போது பிரச்சனை வரும். எலும்புகள் மேல் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் கொதி நீரில் இறந்துவிடும். ஆனால் சரியாக சமைக்காமல் அதை சாப்பிட்டால், எலும்புக்குள் உள்ள பாக்டீரியா உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் பாதி சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது.
எனவே அப்படி பாதி சமைத்த ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட்டால் தான் பிரச்சனை வரும். அதேநேரம் முழுமையாக சமைத்த ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் வராது. எனினும் இந்த சிக்கல் வராமல் இருக்க, கெட்டுப்போன ஆட்டுக்கால்களை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 100க்கு 99 சதவீதம் தவிர்ப்பது நல்லது. தெரியாமல் போட்டுவிட்டால் கூட , அதை நன்றாக கொதிக்க வைத்து சமைத்துவிட்டால் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. அதேநேரம் பூஞ்சான்கள் ஆட்டுக்காலில் உள்ள தசைகள் எல்லாவற்றையும் பூஞ்சைகள் சாப்பிட்டுவிடும். நாம் கொதிக்க வைத்து சாப்பிட்டாலும் வெறும் சூப்பை தான் சாப்பிடும் நிலை இருக்கும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications