20 நாட்களாக இயங்காத கட்சி.. செதில் செதிலாக சிதறிய தவெக.. உட்கட்சி பூசல் விஸ்வரூபம்.. ஸ்டன் ஆன விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடந்த 20 நாட்களாக கிட்டத்தட்ட இயங்காமல் முடங்கி போய் உள்ளது. ஒரே ஒரு விபத்து கட்சியை மொத்தமாக முடக்கி உள்ளது.

ஏற்கனவே ஒரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் உள்ளே புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சிக்குள் கடுமையான மோதல்கள், உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு உள்ளன.

TVK Vijay

1. கடந்த 20 நாட்களாக கட்சி இயங்கவே இல்லை, கட்சியில் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. கட்சிக்கு பிரச்சனை என்றதும் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். அதன்பின் வந்தவரும் கூட கரூர் விவகாரம் தொடர்பாக பேசவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி கூட செலுத்தவில்லை என்றெல்லாம் விமர்சனங்களை கட்சி நிர்வாகிகள் வைக்க தொடங்கி உள்ளனர்..

2. கட்சியின் அனைத்து அணிகளும் முடங்கிவிட்டன. செய்தி தொடர்பாளர்கள் கூட ஆக்டிவ்வாக இல்லை. கட்சியின் டாப் தலைகள் எல்லாம் ஸ்டன் ஆகிவிட்டனர்.

3. கட்சியில் எந்த விதமான செயல்பாடுகளும் நடக்கவில்லை. கட்சி தொடங்கி 2 வருடங்கள் ஆகப்போகும் நிலையில் கட்சியின் மிக முக்கிய கட்டமைப்புக்கு தேவையான,
மாநில இளைஞர் அணி எங்கே?
தொண்டர் படை எங்கே?
மகளிர் அணி எங்கே?
மீனவர் அணி எங்கே?
விவசாயிகள் அணி எங்கே?
தொழிலாளர்கள் அணி எங்கே?
திருநங்கைகள் அணி
மாற்றுத்திறனாளிகள் அணி
இளம் பெண்கள் அணி
குழந்தைகள் அணி
பணியாளர் அணி
வர்த்தகர்கள் அணி
நெசவாளர்கள் அணி
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி
தொழில்முனைவோர் அணி
இந்தியாவில் வசிக்காத அணி
கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அணி
தன்னார்வலர்கள் அணி
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று முக்கியமான அணிகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

4. தமிழக வெற்றிக் கழகம் உள்ளே தற்போது சில முக்கிய தலைவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. புஸ்ஸி ஆனந்த் - ஆதவ் அர்ஜுனா இடையே மோதல் நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் கடுமையான கருத்து வேறுபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று நாள் முழுக்க புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக ஆதவ் அர்ஜுனா ஆட்கள் போஸ்டுகளை செய்தனர். ஆதவ் அர்ஜுனன் ஆதரவு நிர்வாகிகள் பலர் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர் பொதுச்செயலாளராக சரியாக செயல்படவில்லை. கட்சி நிர்வாகியாக சரியாக இயங்கவில்லை.

5. இன்னொரு பக்கம் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராகவும் புஸ்ஸி ஆனந்த் ஆட்கள் போஸ்ட் செய்து வருகின்றனர். அவர் பாஜகவிடம் நெருக்கமாகிவிட்டார். பாஜகவிடம் தஞ்சம் அடைந்துவிட்டார் என்றெல்லாம் புஸ்ஸி ஆனந்த் ஆதரவு நிர்வாகிகள் போஸ்ட் செய்து வருகின்றனர்.

6. இன்னொரு பக்கம் ஜான் ஆரோக்கியசாமி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஜான் ஆரோக்கியசாமி விஜயை தவறாக வழி நடத்துகிறார். அவர் தவறான ஆலோசனைகளை வழங்குகிறார். மோசமான முடிவுகளை எடுக்கிறார் என்றெல்லாம் ஜான் ஆரோக்கியசாமி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+