சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்டாலின்.. ஒரு வேண்டுகோள்".. தந்தை கருணாநிதியை எதிர்த்த அதிமுக மாஜி அமைச்சர் மகனுக்கு பாச அட்வைஸ்!

முன்னாள் அமைச்சர் ஹண்டே முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியை பாராட்டி, முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கொரோனா சூழலில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினிடம் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்..

தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. இதன்காரணமாக, தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது.

தமிழ் மட்டுமல்ல.. 8ஆம் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்தமிழ் மட்டுமல்ல.. 8ஆம் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்

பாராட்டு

பாராட்டு

எனினும், முதல்வர் ஸ்டாலின் எந்நேரமும், கொரோனா தடுப்பு ஆய்வுகளிலும் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில், ஸ்டாலின் பிபிஈ கிட் அணிந்துகொண்டு கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது பல தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.. இந்நிலையில், டாக்டரும், முன்னாள் தமிழக சுகாதார துறை அமைச்சருமான எச்.வி.ஹண்டே முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி

கருணாநிதி

அதில் அவர், "கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே முடியாது. கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. எனக்கு பெருமை அளிப்பது என்னவென்றால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார். நான் தங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

ஜெயலலிதா மரணம் குறித்த பரபரப்பின்போது, "செப்டம்பர் 22-ம் தேதிக்கு முன்னதாக ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்த டாக்டர்கள் யார், யார்" என்று கேட்டு அதிமுக தலைமையை கிடுகிடுக்க வைத்தவர்தான் ஹண்டே.. இவருக்கு இப்போது 94 வயதாகிறது.. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர்..

பிரச்சாரம்

பிரச்சாரம்

தீவிரமான எம்ஜிஆர் விசுவாசியாவார்.. அதேபோல தீவிரமான கருணாநிதியின் எதிர்பார்ப்பாளர்.. இவர் ஒருமுறை கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிட்டவர்.. 1980 சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டார்.. ஆனால், தோற்று விட்டார்.. இருந்தாலும், பல தேர்தல்களில் கருணாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.

அக்கறை

அக்கறை

அப்படி இருந்தாலும், அரசியலையும், மருத்துவ தொழிலையும் தனித்தனியாக அணுகி வந்தவர்.. அதனால்தான், கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிகிச்சை தருவதாக டாக்டர் ஹண்டேவும் வந்திருந்தார்.. இப்போது ஸ்டாலினின் உடல்நிலை குறித்தும் அக்கறையாக அட்வைஸ் செய்து வெளியிட்ட அறிக்கையானது பெரிதும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

English summary
Former health minister HV Hande writes letter to MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X