“லைட்டை எரிய விட்டு டார்ச்சர்.. 4 கிலோ குறைந்த அன்பில் மகேஷ்”.. நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். "சரியான உணவு வழங்கப்படாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 2 முதல் 4 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் பெற்​றுத் தருவதாகக்​கூறி ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பண மோசடியில் ஈடு​பட்​ட​தாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார்.

Anbil mahesh poyyamozhi

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதிட்டார். அப்போது, "சரியான உணவு வழங்கப்படாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 2 முதல் 4 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் வாதிடுகையில், "அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை போலீஸ் காவல் கோரியுள்ளனர். ஆனால், அவர் கைது செய்யப்படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதோடு, செப்டம்பர் 18 ஆம் தேதியன்றும் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையின்போது அனைத்துக் கேள்விகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. 'வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் கேளுங்கள், தருகிறோம்' என்று நாங்களே கூறினோம். எனவே, விசாரணையில் இருந்து மறைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை" என வாதிட்டார்.

மேலும், அன்பில் மகேஷ் எங்கும் ஓடி விடமாட்டார். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். சிறையில் அவருக்கு மருந்துகள் கூட முறையாக தரவில்லை. மாநில நலனுக்காக அவரும் அவரது குடும்பமும் ரத்தத்தையும் வியர்வையும் அளித்துள்ளனர். சிறையில் அவர் தூங்கும்போது கூட விளக்கை எரியவிடுகின்றனர்." என்றும் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பு மற்றும் சரியான உணவு வழங்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டதால் அதனை அவரால் சாப்பிட முடியவில்லை என்றும் வழக்கறிஞர்கள் அபுடுகுமார் ராஜரத்தினம் மற்றும் ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆகியோர் நீதிபதி முன்பு முறையிட்டனர். மேலும், அவருக்குச் சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன் விசாரணை நடைபெற்றது. வாதத்தின்போது விசாரணை அதிகாரி தரப்பில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பெறப்பட்ட லஞ்சப்பணம் எங்கு சென்றது என அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தும்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் பின்பற்றப்படும். அன்பில் மகேஷ் உரிய மன நலன், உடல் நலத்துடனும் மீண்டும் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்படுவார். அன்பில் மகேஷ், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள், பினாமி குறித்து விசாரிக்க வேண்டும். உறவினர்கள் சொத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 5 நாள் கஸ்டடி தேவை என்று விசாரணை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அன்பில் மகேஷை நவம்பர் 2 வரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+