இடைத்தேர்தல் ஆதரவை கூட்டணியாக பார்க்காதீங்க.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. சீமான் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். இடைத்தேர்தல் ஆதரவை கூட்டணியாக பார்க்க கூடாது என்று கூறிய சீமான், இந்த விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக மற்றும் நாதக என்று யாரும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Seeman

இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பே இன்னும் வெளியாகாத சூழலில், சீமானின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனிடையே தவெகவுக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சீமானை ஆதரிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் பசும்பொன் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது, சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.. பின்னர் பேசலாம் என்று தெரிவித்தார். இதனால் சீமானை திமுக ஆதரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். பசும்பின் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், இடைத்தேர்தல் ஆதரவை கூட்டணியாக பார்க்க முடியாது. தேர்தல் வரட்டும்.. பார்ப்போம் என்று கூறியுள்ளார். அதனைதான் நானும் கூறுவேன்.

கூட்டணி என்று கிடையாது. திமுக மற்றும் அதிமுக விலகி கொண்டு என்னை பொது வேட்பாளராக நிறுத்துவோம் என்பதை திமுக, அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இந்த பேச்சை தொடங்கியது யாரென்று அனைவருக்கும் தெரியும். தவெக கட்சியினரும், நிர்வாகிகளும் தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாதக மட்டுமே களத்தில் இருந்தது. அப்போது நாதகவை பொது வேட்பாளர் என்று யாரும் கேட்கவில்லை. நாதகவின் அத்தனை பேரும் பொது வேட்பாளர் தான். குறிப்பிட்ட சமூகத்திற்கோ, மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ என்று இல்லை. உலகின் பொது அரசியலை முன் வைத்தது தமிழன் தான் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+