இந்தியாவுக்கே தலைகுனிவு.. பிரதமர் கண்டிக்கணும்.. ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட விவகாரத்தில் பாலபாரதி சுளீர்
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது மோசமான நடவடிக்கை என்றும் இந்திய பிரதமர் இதுபோன்ற சம்பவங்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அந்த அணியின் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து, பெவிலியன் நோக்கி திரும்பினார். அப்போது ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களில் சிலர் அவரை நோக்கி, ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மைதானத்தில் இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். உத்வேகம் மிக்க விளையாட்டான கிரிக்கெட்டில், அரசியல் ரீதியிலான வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்த விவகாரத்தால் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாலபாரதி, "அண்டைநாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது இந்திய நாட்டின் அரசியல் பண்பாட்டிற்கு ஏற்ற நடவடிக்கை இல்லை. ஆகவே இந்திய நாட்டின் பிரதமர் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக்கூடாது, கண்டிக்க வேண்டும். இந்தியாவின் கிரிக்கெட் போர்டு தலைமையும் இதைக் கண்டிப்பதோடு, இனி இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications