Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினி பேச்சு + ஆளுநர் டீ பார்ட்டி + கருணாநிதி நாணயம்.. கவனிச்சீங்களா? திமுக காட்டில் மழையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு, ஆளுநர் ரவி தந்து தேநீர் விருந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீடு என்று அடுத்தடுத்து திமுக காட்டில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிலும் நேற்று நடந்த ரஜினிகாந்தின் பேச்சு மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.

rajnikanth udhyanidhi stalin stalin

பாராட்டு விழா: கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர்.

மரியாதை செய்தார்: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாடி வாங்க அண்ணாமலை.. என்று ஸ்டாலின் அழைத்தது கவனம் பெற்றுள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அண்ணாமலையை முன்னால் அழைத்த முதல்வர் ஸ்டாலின் கவனம் பெற்றார். அங்கே நின்ற கனிமொழி சிரித்துக்கொண்டே அவருக்கு வழிவிட்டார்.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை தேடியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் முடிவு: முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றதும், ஆளுநருடன் சிரித்துச் சிரித்துப் பேசியதும் அனைவரது புருவங்களையும் உயரச் செய்திருக்கிறது. முதலில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்த ஸ்டாலின், அதன்பின் பங்கேற்றது ஏன் என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இணக்கம் ஏன்?: ஆளுநரின் தேநீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தால், கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு ராஜ்நாத் சிங் வரமாட்டார் என்றும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணிப்பார்கள் என்றும், புறக்கணிப்பை அண்ணாமலை வெளிப்படையாகச் சொல்வார் என்றும் செய்திகள் வந்தன.. இதனால் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் . இந்த விவகாரத்தில் சுமுகமாக செல்லலாம் என்று முடிவு எடுத்து இணக்கமாக திமுக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இ்ல.கணேசன் வீட்டு விழாவிற்கு ம்ம்தா வருகிறார்கள் என்பதால்.. தானும் வரமாட்டேன் என்று சொன்னார் அண்ணாமலை. ஆனால் அதே அண்ணாமலை இன்று ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதெல்லாம் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதால்தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கும் கூட்டணிக்கு தொடர்பில்லை என்றே திமுகவினர், பாஜகவினர் நம்மிடம் கூறுகின்றனர். இந்த இணக்கமான உறவு மத்திய மாநில அரசு இடையே இருக்க வேண்டும். அது முக்கியம். மற்றபடி கூட்டணி எல்லாம் எங்களுக்கு பாஜகவுடன் செட்டாகாது என்று திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவினரும்.. கூட்டணி எல்லாம் செட்டாகாது.. அதே சமயம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை மோடி, ராஜ்நாத் சிங் மிக அதிகமாக பாராட்டி விட்டனர். அப்படி பாராட்டாமல் இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ரஜினி இணக்கம்: நேற்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார்.

உதயநிதி பாராட்டு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசுகையில், அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி.

என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்கொரு ஸ்டாலினை வைத்து.. அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார், என்று பேசினார்.

திமுக பக்கம் சாய்ந்து பேச்சு: அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள். முதல்வர் ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி"

ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+