Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் + வருமான வரி + பான் கார்டு.. இன்று முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்று முதல் வருமான வரி, ஆதார் அட்டை மற்றும் பரஸ்பர நிதிகள், F&O, TDS தொடர்பான விதிகள் மற்றும் சிலிண்டர் விலைகள் உள்ளிட்ட பலவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளனர். இன்று முதல் மாறும் முக்கிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதார் மாற்றம்: இத்தனை காலம் ஆதார் இல்லாதவர்கள் ஆதார் பதிவு செய்ததற்கான எண்ணை கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இனி ஆதார் எண்ணுக்குப் பதிலாக ஆதார் பதிவு ஐடியைக் குறிப்பிட அனுமதிப்பதை நிறுத்தப்படும். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. இந்த மாதம் முதல், தனிநபர்கள் பான் ஒதுக்கீடு ஆவணங்களில் தங்கள் ஆதார் பதிவு ஐடியை குறிப்பிட முடியாது. மாறாக ஆதார் கணக்கு எண்ணை மட்டுமே கொடுக்க முடியும்.

tangedco eb aadhaar

அதேபோல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆவணங்களில் தங்கள் ஆதார் பதிவு ஐடியை குறிப்பிட முடியாது. மாறாக ஆதார் கணக்கு எண்ணை மட்டுமே கொடுக்க முடியும்.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்கள் அக்டோபர் 1, 2024 முதல் செயல்படுத்தப்படும். புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களைத் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்தக் காலக்கட்டத்தில் தற்போதுள்ள கட்டணங்கள் மாறாமல் இருக்கும். இந்த முடிவால் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் அக்டோபர் மாதமும் அதே போல் தொடரும்.

சிறார்களின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துதல், பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐகளால் பிபிஎஃப் கணக்குகளை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளன.

வருமான வரி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தொடர்பான சில மாற்றங்களை மத்திய பட்ஜெட் 2024 இல் அறிமுகப்படுத்தினார். அதில் சில மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும். மூலத்தில் செய்யப்படும் வரி விலக்குகள் (டிடிஎஸ்) தொடர்பான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். குறிப்பிட்ட மத்திய மற்றும் மாநில அரசு பத்திரங்களுக்கு 10% TDS பொருந்தும். கூடுதலாக, ஆயுள் காப்பீட்டு பாலிசி, வீட்டு வாடகை செலுத்துதல் போன்றவற்றுக்கான டிடிஎஸ் செலுத்துதல் இன்று முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிலிண்டர் விலை: வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் உயர்ந்து உள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து உள்ளது. ரூ.1855க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+