வேகமாக வீசும் காற்று.. கஜா புயலால் சென்னை, புதுவையில் கடல் சீற்றம்.. மக்கள் பீதி
கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த புயலால் கடலோர மாவட்டங்கள்தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்குதான் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில் தயார் நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

எண்ணூர்
இந்த நிலையில்தான் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதையும் மீறி செண்டை மீனவர்கள் சிலர் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர். இதற்கு மத்தியில் சென்னையில் உள்ள எண்ணூர் கடலை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

சீற்றம் ஏற்பட்டது
இதை தொடர்ந்து கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. எண்ணூர் அருகே உள்ள சின்ன குப்பம், பெரிய குப்பம் கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பீதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புதுவையில் என்ன?
கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி கடற்கரை சாலை மூடபட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் கடல் சீற்றத்தை பார்க்க வந்தனர். கடல் சீற்றத்தை பார்க்க வரும், பொதுமக்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த புயலால் கடலூர், நாகை, பாம்பன் ஆகிய கடலோர மாவட்டங்கள்தான் இந்த புயல் காரணமாக பாதிப்பை சந்திக்க உள்ளது. தற்போது சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக கடலோர காவல் படையும் தயார் நிலையில் இருக்கிறது. மீட்பு பணிகளை செய்ய வசதியாக கடலோர காவல்படை அந்தந்த மாவட்டங்களில் களமிறங்கி உள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications