நடிகர் அஜித்தின் 'அந்த' ஒரு நிமிடம்.. ஒரே நாளில் 2 தரமான சம்பவம்.. சென்னை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது
சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்த அஜித்தின் நடவடிக்கை ரசிகர்களை கவர்ந்துள்ளது
சென்னை: அஜித்தை வைத்து அரசியல் கணக்கை சிலர் போட்டு வரும் சூழலில், ஒரே நாளில் நடந்த 2 சம்பவங்கள், பரபரப்பை கிளப்பி விட்டு வருகின்றன.. அதற்கான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ரஜினி, கமலுக்கு அடுத்தகட்டமாக விஜய் அரசியலுக்கு வருவதாக அடிக்கடி பேச்சுக்களும், சலசலப்புக்களும் எழுந்து அடங்கும். ஆனால் இப்படி ஒரு சலசலப்பு அஜித் விஷயத்தில் அவ்வளவாக வந்தது இல்லை.
ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் 2 முறை அஜித் பெயர் அடிபட்டது. ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அஜித் சென்று பார்த்ததாக நம்பத்தகாத தகவல்கள் வெளிவந்தன.

ஜெயலலிதா
இன்னொரு முறை, அஜித்தை அழைத்து பேசிய ஜெயலலிதா, "உங்களுக்கு மனைவி, குடும்பம் இருக்கிறார்கள். இவ்வளவு பயங்கரமான சண்டை காட்சிகளிலோ அல்லது கார், பைக் ரேஸ்களிலோ அதிகமான ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது. அது மட்டுமில்லை, இருக்கும் நடிகர்களிலேயே அஜித்தை தனக்கு பிடிக்கும் என்றும் அதற்கு காரணம் அவரது நேர்மையும், தன்னம்பிக்கையும்தான் என்றும் ஜெயலலிதா சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன...

புரொமோஷன்
எனினும், ரசிகர் மன்றம் வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர் அஜித்.. இருந்தபோதிலும், இன்னும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்... தன்னுடைய படத்தின் புரோமோஷனுக்காகக்கூட அஜித் மீடியாக்களை சந்திப்பது இல்லை... எந்தக் காலத்திலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாகவும் திடமாகவும் அறிவித்தும் விட்டவர்.

வெளிச்சம் - மீடியா
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா வெளிச்சம், சினிமா வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்பதிலும் அஜித் தொடர்ந்து கவனமாக இருக்கிறார்... இப்படிப்பட்ட நிலையில், இவர் சமீபத்தில் தன்னுடைய 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.. அப்போதுதான் திடீரென அரசியல் சாயம் பூசப்பட்டது.. அதற்கு காரணம், அஜித் இல்லை.. அதிமுக தலைவர்கள்தான்.. அஜித் பிறந்தநாளில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் அது, அரசியலாக மாறியது.

கருப்பு - வெள்ளை
எனினும் அஜித் தரப்பில் இதற்கெல்லாம் பெரிய ரியாக்ஷன் இல்லை.. இந்நிலையில்தான் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்வதற்காக இன்று சென்னை ஏர்போர்ட் வந்திருந்தார்.. அப்போது 2 சம்பவங்கள் நடந்துள்ளன.. அஜித் ஒயிட் கலர் சட்டையும், கறுப்பு கலரில் பேண்ட்டும், மாஸ்க்கும் அணிந்திருந்தார்.. அப்போது அஜித்தை ஏர்போர்ட்டில் அதிகாரி ஒருவர் சோதனை செய்தார்.. அஜித் என்று அடையாளம் தெரிந்து சோதனை செய்தாரா? அல்லது வழக்கமான தன்னுடைய பணியை மேற்கொண்டாரா? என்று தெரியவில்லை..

வீடியோ
ஆனால், விமான நிலையத்தில் அதிகாரி சோதனை செய்யும்போது அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.. இரு கைகளையும் உயர்த்தி, அதிகாரி சொல்பேச்சை கேட்டு, மதிப்பு தந்தார்.. இதைதான் யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. அந்த ஒரு நிமிடம் அஜித்தின் செயல்பாடுகள் ரசிகர்களை மிரள வைத்துவிட்டது. இதற்கு பிறகு, இன்னொரு சம்பவமும் நடந்தது.. அஜித்குமாரை அங்கு பார்த்ததுமே அங்கிருந்த ரசிகை ஒருவர் போட்டோ எடுக்க முற்பட்டுள்ளார்..

ஷூட்டிங்
அவரை பார்த்ததுமே அஜித், "ஷூட்டிங்கிற்கு டைம் ஆகிவிட்டது.. மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று செய்கையில் காண்பித்து அங்கிருந்து சென்றார்.. இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.. அஜித் நினைத்திருந்தால், அந்த பெண் போட்டோவுக்கு நிற்பது தெரிந்தும், அமைதியாக கடந்து சென்றிருக்கலாம்.. ஆனால், அவருக்கு பணிவுடன் பதில் சொல்லிவிட்டு போன பாங்குதான் அவரை இன்னமும் உச்சத்தில் உயர்த்தி வைத்துள்ளதாக ரசிகர்கள் பூரிப்புடன் தெரிவிக்கிறார்கள்.. வரும் ஆம்.. உண்மைதானே.... "பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா.."












Click it and Unblock the Notifications