சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்னந் தோப்பை விட்டு வெளியே வந்தார் ஜி.கே.வாசன்.. இரட்டை இலையில் போட்டியிட சம்மதம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    GK Vasan: தேர்தல் கூட்டணி யாருடன் வைக்கலாம்- யோசனையில் வாசன்- வீடியோ

    சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா கொடுத்த நல்ல வாய்ப்புகளை நழுவ விட்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இந்த முறை லோக்சபா தேர்தலில் ஒரு சீட்டில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜி.கே. மூப்பனாரின் பாரம்பரியம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பிரபலமானது. சத்தம் போடாமல் காரியத்தை முடிப்பவர் ஜி.கே.வாசன். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எதிரில் யார் நின்றாலும் அலட்டிக் கொள்ளாமல் போய்க் கொண்டே இருப்பார்.

    வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற ஜாம்பவானையே சமாளிக்க முடிந்தவர் மூப்பனார் ஒருவர் மட்டுமே. ஆனால் இன்று அந்த பழைய பெருமை போய் விட்டது. ஒரு சீட்டுக்காக அதிமுகவிடம் கிட்டத்தட்ட சரணடைந்து விட்டார் ஜி.கே.வாசன் என்று சொல்கிறார்கள்.

    அதிமுகவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு.. பின்னணி என்ன? அதிமுகவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு.. பின்னணி என்ன?

    ஆளே இல்லை

    ஆளே இல்லை

    தமாகாவை கூப்பிடக் கூட ஆளே இல்லாத நிலை. வேறு வழியில்லாமல் அதிமுகவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக அடித்துச் சொல்லி விட்டதாம், ஒரு சீட் மட்டுமே. ராஜ்யசபா சீட் கூட உறுதியாக சொல்ல முடியாது. இரட்டை இலை சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும்.

    வாசன் அதிர்ச்சி

    வாசன் அதிர்ச்சி

    இதைக் கேட்டதும் தமாகா வட்டாரம் அதிர்ச்சி அடைந்ததாம். ஒரு சீட், அதையும் இரட்டை இலையில் போட்டியிட வேண்டும் என்றால் எப்படி என்று கேட்டுள்ளார்கள். ஆனால் அதிமுக இறங்கி வரவில்லையாம்.

    வழியில்லாமல் சம்மதம்

    வழியில்லாமல் சம்மதம்

    இந்த நிலையில் வேறு வழியில்லாமல் இதற்கு தமாகா தரப்பு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக மயிலாடுதுறை தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிடலாம் என்று சொல்கிறார்கள்.

     புதிய வரலாறு

    புதிய வரலாறு

    இது உண்மையாக இருந்தால் பாரம்பரிய காங்கிரஸ் காரரான ஜி.கே.வாசன் முதல் முறையாக திராவிட சின்னத்தில் போட்டியிட்டு புதிய வரலாறு படைப்பார். ஆனால் இதை அவர் முதலிலேயே செய்திருக்கலாம். அன்று ஜெயலலிதா தென்னந்தோப்பு சின்னம் வேண்டாம், இரட்டை இலையில் போட்டியிடுங்கள் என்று அழைத்தபோது கேட்டிருந்தால் இந்நேரம் சட்டசபையில் தமாகாவுக்கு 5 எம்எல்ஏக்கள் இருந்திருக்கக் கூடும்.

    எல்லாத்துக்கும் நேரம் வரணும் இல்லையா.

    English summary
    TMCK president GK Vasan has accepted to contest in Twin leaves symbol in LS polls, say sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X