தங்க நகை ரூ.50 லட்சம்.. நாத்தனாருக்கு கல்யாணம், கணவனுக்கு குஷி! ஆயிஷா இரவில் செய்த அதிர்ச்சி காரியம்
சென்னை: தங்க நகைகளின் விலையை நினைத்துகூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகையை இனி விலை கொடுத்து பெரும்பாலானோரால் வாங்க முடியாத நிலைமை வந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், நகை திருட்டு சம்பவங்கள் கடந்த காலத்தைவிட, சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நடந்த இந்த சம்பவங்களை பாருங்கள்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 2 வீடுகளில் நடந்த திருட்டில் 25 சவரன் நகை களவு போயிருக்கிறது.. அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பூட்டியிருந்த வீட்டு கதவு பூட்டை உடைத்து 40 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை நேற்றைய தினம் திருடி சென்றுள்ளார்கள். வீட்டின் பின்பக்கமாக வந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அரசு ஒப்பந்ததாரர்
இதுபோலவே விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் அரசு ஒப்பந்தரர் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார்.. இவர் நேற்றைய தினம் உறவினர் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் பீரோவை உடைத்து, மூன்றரை பவுன் தங்கம், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மேற்கண்ட திருட்டு சம்பவங்கள் நேற்று ஒரே நாளில் நடந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
தங்கைக்கு ரூ.50 லட்சம் தங்க நகைகள்
தங்க நகை திருட்டு சம்பவங்கள் வடமாநிலங்களிலும் அதிகரித்து விட்டது. உத்தரபிரதேசத்திலும் நகை திருட்டு நடந்து, அங்குள்ள போலீசாரை கிறுகிறுக்க வைத்துவிட்டது.
ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த அக்ரம் என்பவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். அக்ரமின் சகோதரிக்கு வரும் 11ம் தேதி திருமணம் ஏற்பாடாகி இருந்தது.. தன்னுடைய தங்கைக்கு திருமணம் என்பதால், அக்ரம் ஆசை ஆசையாக நகைகளை வாங்கினார்.
கிட்டத்தட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை, தங்கைக்காகவே பார்த்து பார்த்து வாங்கி தன்னுடைய வீட்டில் சேர்த்து வைத்துள்ளார்..
இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த நகைகள் திடீரென 23ம் தேதி இரவு மாயமாகிவிட்டது.. 11ம் தேதி திருமணம் வைத்துள்ள நிலையில், வீட்டிலிருந்த நகைகள் எப்படி காணாமல் போனது என்று அக்ரம் அதிர்ச்சியடைந்தார்.. உடனடியாக போலீசிலும் புகார் அளித்தார்.
இரவு நேரத்தில் திருட்டு
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகையை திருடியது யார் என்ற விசாரணையில் ஈடுபட்டனர்.. அப்போதுதான், நகைகளை திருடியது அக்ரமின் மனைவி ஆயிஷா என்பது அம்பலமானது.
நாத்தனாருக்கு தன்னுடைய கணவர், இவ்வளவு நகைகளை போடுவது ஆயிஷாவுக்கு பிடிக்கவில்லையாம்.. அதனால்தான், எல்லா நகைகளையும் திருடிக் கொண்டு போய், தன்னுடைய அம்மா வீட்டில் வைத்துவிட்டாராம்.
மர்மநபர்கள் பீரோவை உடைத்து நகையை திருடி சென்றுவிட்டார்கள் என்று பழியை போட்டு விடலாம் என்று நினைத்து, இரவு நேரத்தில் அனைத்து நகைகளையும் ஆயிஷா எடுத்து சென்றாராம். ஆனால் மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்றதற்கான அடையாளம் எதுவுமே இல்லாததால்தான், வீட்டிலிருந்த ஆயிஷா மீதே போலீசாருக்கு சந்தேகம் திரும்பியிருக்கிறது..
இப்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் மீட்ட போலீசார், ஆயிஷாவிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications