தங்கம் விலை! இப்ப ஏறுவதெல்லாம் ஜுஜுபி! டிசம்பரில் ஏற போகுது பாருங்க! பகீர் கிளப்பும் நகை வியாபாரிகள்
சென்னை: தங்கத்தின் விலை இப்போது உயர்வது ஒன்றும் பெரிதல்ல என்றும் வரும் டிசம்பர் மாதம் இதன் விலை எவ்வளவு உயரும் என்பது குறித்து நகைக் கடை வியாபாரிகள் சிலர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்யும் பணம் எப்போதும் வீண் போவதில்லை என்பதால் பலர் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். தற்போது விலை உயர உயர தங்கம் வாங்க மக்கள் யோசிக்கிறார்கள். ஆனாலும் வசதி படைத்தவர்கள் வாங்கத் தான் செய்கிறார்கள்.

இந்த தங்கத்தின் விலையானது ஏழை, நடுத்தர மக்களைத்தான் பாதித்துள்ளது. ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை உள்ளது. 2007ஆம் ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் ரூ 5000த்திற்கு கிடைத்த நிலையில் தற்போதே 50 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாகிறது.
சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதியான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 840 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,360 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 105 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,670 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 2 உயர்ந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ 91- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 91000-க்கும் விற்பனையானது.
இன்றைய தினம் மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி பட்ஜெட்டின் போது தங்கம் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை குறைந்தபடியே இருந்தது.
ஆனால் சில நாட்கள் கழித்து தங்கத்தின் விலை குறைவதும் உயர்வதுமாக இருந்தது. தங்கம் மீது விலை உயர்வு என்பது 3 இலக்கங்களில் இருந்தால் குறைவது என்பது 2 இலக்கங்களில் மட்டும் தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் தங்கத்தின் விலை ரூ 50 ஆயிரத்திற்கு வந்தது. அடுத்த நாள் 50 ஆயிரத்திற்கு கீழ் இறங்கும் என பார்த்த போது அது போல் குறையவில்லை.
தற்போது நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 53 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இப்போது ஏறுவதெல்லாம் ஒன்றும் இல்லை என்றும் இனி ஏற போவதுதான் ஹைலைட் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து நகைக் கடை உரிமையாளர்கள் கூறியதாவது: வரும் டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்திற்கு விற்பனை ஆகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1 லட்சமாக விற்பனையாகும் என குபீர் தகவலை தெரிவித்துள்ளனர். இப்போது 50 ஆயிரத்தில் விற்கும் போதே தங்கத்தை வாங்க முடியவில்லை. அப்படியிருக்கும் போது ஒரு லட்சமாக உயர்ந்தால் என்ன செய்வது என்ற கவலை எழுந்துள்ளது.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications