Gold price: தங்கம் வைத்த வேட்டு.. நகைக்கடைக்காரர்களுக்கு இப்படி ஒரு சோதனையா? அடக்கடவுளே
சென்னை: தங்க விலை (Gold price) நிலையில்லாமல் ஏறி இறங்கி வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். விலை உயர்வால் நகைகடைகாரர்களுக்கும் முன்கூட்டியே பெறப்படும் ஆர்டர்களே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடாத குறையாய் மறுக்கிறார்கள். விலை ஏற்றத்தால் நகைக்கடைகார்களுக்கு ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன? ஆர்டர்களை ஏன் பெற மறுக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தங்கம் விலை நினைத்து கூட பார்க்காத அளவிற்கு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு துவகக்த்தில் இருந்தே ஜெட் வேகத்தில் பயணித்துக்கொண்டு இருந்த தங்கம் விலை இந்த ஆண்டு மின்னல் வேகத்தில் செல்ல தொடங்கியிருக்கிறது.

Gold price புது வரலாற்று உச்சம்
உலகளாவிய போர் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை வரலாற்றில் இதுவரை எந்த நாளும் இல்லாத வகையில் கடந்த 29 ஆம் தேதி சவரனுக்கு ரூ.9,520 அதிகரித்து பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற உச்சபட்ச விலையை எட்டி வரலாற்று சாதனையை பதிவு செய்தது.
நகைக்கடைகளில் விற்பனை குறைந்தது
கடந்த 28 ஆம் தேதி சவரனுக்கு ரூ.5,200-ம் 29 ஆம் தேதி சவரனுக்கு ரூ.9,520-ம் என 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.14,720 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. தங்கம் 2 நாட்களில் இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நகைக்கடைகளில் விற்பனை குறைந்தது.
அதேவேளையில், பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று முதல் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. விலை குறைந்தாலும் தங்கம் விலையை நினைத்தாலே அச்சப்படும் சூழலில்தான் தற்போது உள்ளது. மக்கள்தான் இப்படி என்றால், நகைக்கடைகாரர்களின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளதாம்.
நகைக் கடைக்காரர்கள் ஆதங்கம்
தங்க நகை விலை கூடியதால் நகை கடைக்காரர்கள் கொள்ளை லாபம் பார்த்து இருப்பார்கள் என்று நினைக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லையாம். அதாவது, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக நீடித்து வருவதால், நகைக் கடைக்காரர்கள் பல நடைமுறை சவால்களை எதிர்கொள்வதாக கூறுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போது முன்கூட்டியெடுக்கும் நகை 'ஆர்டர்'களை தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. பெரிய கடைக்காரர்கள் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிகப்படியான விலை உயர்வு, சரிவு காரணமாக விலையை குறிப்பிடுவது, நகை ஆர்டர்களை உறுதி செய்வது அல்லது நகை இருப்பை நிர்வகிப்பது போன்றவை கடினமாக இருப்பதாக நகைக் கடைக்காரர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
நகை வியாபாரிகள் சொல்வது என்ன?
ஒரு நாளின் சிறிய விலை மாற்றம் கூட லாபத்தை முழுமையாக அழித்துவிடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. தங்கம் விலை ஏறி, இறங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதலை ஒத்திவைப்பதும் ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களை மறுபரிசீலனை செய்வது அல்லது ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களில் குறிப்பிட்டிருந்த எடையைவிட குறைவான வடிவமைப்பில் நகையை கேட்பதுமான நிலையும் உள்ளதாம்.
இதன் காரணமாக முன்கூட்டிய ஆர்டர்களை தவிர்ப்பதாகவும் நகை வியாபாரிகள், கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோல்டு குரு சாந்தகுமார் கூறுகையில், , ' அனைத்து கடைக்காரர்களும் முன்கூட்டிய நகை ஆர்டர்கள் எடுப்பதை தவிர்க்கிறார்கள்.
ஏனெனில் இப்படி நகை ஆர்டர்கள் எடுத்தால், அந்த ஆர்டருக்கான முழுத்தொகையையோ அல்லது 75 சதவீத தொகையையோ செலுத்த வேண்டியுள்ளது. தங்கம் விலை தாறுமாறாக உயர்வது, விலை சரிவால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது" என்றார்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications