பஸ்ஸில் இப்படியெல்லாம் மாற்று திறனாளிகளை ட்ரீட் பண்ணாதீங்க! டிரைவர், கண்டக்டருக்கு தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக போக்குவரத்து துறை, நடத்துனர், ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியிருப்பதுடன், இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அது என்ன?
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில், தமிழக போக்குவரத்து துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.. இதையொட்டியே, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறது..

போக்குவரத்து துறை: சமீபத்தில்கூட, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை ஒன்றினை வழங்கியிருந்தார்.. பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை ஒரு சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
அந்த சுற்றறிக்கையில், "மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும். ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தரவேண்டும்" என்பது உட்பட இன்னும் ஏராளமான விஷயங்களை வலியுறுத்தியிருந்தார். அறிவுரைகளை கூறியிருந்தார்.
மாற்றுத் திறனாளிகள்: இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து, அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போக்குவரத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் உள்ளதாவது:
அறிவுறுத்தல்கள்:
- மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.
- மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
- ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
- எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல், தக்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கும் போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சலுகைகள்: ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
அதேபோல, பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications