விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்த தென்மேற்கு பருவமழை.. செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் சாகுபடி தீவிரம்
சென்னை: தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி நெற்பயிர் நடவு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
Recommended Video
கடந்த ஒரு வாரமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் நெற்பயிரை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மெய்யூர், அத்தியூர், பொன்விளைந்த களத்தூர் மற்றும் ஒழலூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நெற்பயிரை நடவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆவணி இறுதி மாதத்திலேயே மழை பெய்வது தொடங்கியிருப்பதால் அடுத்து வரும் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் பயிரிடப்படும் என்எல்ஆர், பாபட்லா மற்றும் கிச்சலிசம்பா உள்ளிட்ட நெல்ரகங்களை நடவு செய்து வருகின்றனர்.

இவ்வகை நெற்பயிர்கள் ஐப்பசியில் அடிக்கும் காற்றிற்கும், கார்த்திகையில் பெய்யும் மழைக்கும் தரையோடு மடியாமல் நிமர்ந்து நிற்பதாலும், அதிகளவில் மகசூல் கிடைப்பதாலுமே இவ்வகை நெற்பயிர்களை பயிரிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications