பிறப்பு சான்றிதழ் ரூல்ஸ் மாறுகிறது.. இனி லேட்டாகாது, ஒரு வாரம்தான்.. மத்திய அரசு போட்ட சபாஷ் உத்தரவு
சென்னை: குழந்தை பெற்றெடுத்த பிறகு, அந்த தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் முன்னரே அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியப் பதிவாளர் ஜெனரல் (Registrar General Of India - RGI) தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் குறித்து கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969ன் கீழ் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.. பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடனேயே பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டமாகும்.. இது ஏற்கனவே நடைமுறையிலும் உள்ளது..
குழந்தை எந்த ஊர் மருத்துவமனையில் பிறக்கிறதோ அந்த ஊர் பிறப்பு - இறப்பு பதிவாளர் மூலம்தான் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் வசிப்பிடத்தில் இருந்து குழந்தைகளின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது விதியாக உள்ளது..

பிறப்பு சான்றிதழ் அவசியம்
பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், பெற்றோரின் திருமணச் சான்றிதழ், மருத்துவமனையிலிருந்து குழந்தை பிறந்தது குறித்து வழங்கப்பட்ட கடிதத்தின் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று போன்றவை ஆவணங்களாக தந்து பிறப்புச்சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது பிறப்பு சான்றிதழ் - நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிவிட்டது.. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் போன்ற சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
புதிய விதிமுறைகள்
திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கவும், இந்த பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம். ஆன்லைன் வழியாக மத்திய அரசின் வெப்சைட்களில் இந்த பிறப்பு சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும்.
கடந்த மார்ச் மாதம், பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்திருந்தது. அதில், 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்றும், என்றும், கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்றும் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
மத்திய அரசு அதிரடி
இந்நிலையில், மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. அதன்படி. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பாகவே, பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியப் பதிவாளர் ஜெனரல் (Registrar General Of India - RGI)தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறது..
அந்த கடிதத்தில், இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை பிறப்பு பதிவு மையங்களாக செயல்படும் நிலையில், பிறப்பு சான்றிதழின் பயன்பாடு சமீபகாலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உடனடியாக பிறப்பு சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
தாய்மார்களிடம் வழங்க வேண்டும்
எனவே, புதிதாக பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு முடிந்தவுடன், பிறப்பு சான்றிதழை பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.. 50% குழந்தை பிறப்புகள் நடக்கும் அரசு மருத்துவமனைகள் பிறப்புச் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும்.
7 நாட்களுக்குள் சான்றிதழ்
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளும் பயன்படுத்தப்படும்.. இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும்" என்று அந்த கடிதத்தில் இந்திய பதிவாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.
சபாஷ் முடிவு
பிறந்த குழந்தைகளில் சுமார் 10 சதவீதம் பேர் பிறப்புச் சான்றிதழை பெறுவதில்லை என RGI ஏற்கனவே ஆய்வு ஒன்றில் தெரிவித்திருந்தது.
அதனால்தான், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிறப்பு மற்றும் இறப்பை 21 நாள்களில் பதிவு செய்ய வேண்டும் என்று எற்கனவே எச்சரிக்கை விடுத்தும்கூட, இந்த விதியை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்நிலையில், ஒரே வாரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவு பெருத்த கவனம் பெற்று வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications