‛‛மாதம் ரூ.1000’’.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.. சென்னை கலெக்டர் அறிவிப்பு
சென்னை: நடப்பு கல்வியாண்டான 2024-25 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகளும் தமிழக அரசின் ‛புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் கல்விக்கு உதவியும் வகையிலும் ‛புதுமைப்பெண்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்பதன் கீழ் புதுமைப்பெண் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு முடித்திருந்தாலும் ‛புதுமைப்பெண்' திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெறலாம் என்று அறிவிப்பு செய்தார்.
இந்நிலையில் தான் சென்னையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் ‛புதுமைப்பெண்' திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டள்ளதாவது:
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக "புதுமைப்பெண் திட்டத்தில், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ. 1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, 2024-25ஆம் கல்வியாண்டு முதல்'புதுமைப் பெண்" திட்டத்தின் வாயிலாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
எனவே. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் 'புதுமைப் பெண்" திட்டத்தில் பயன்பெற அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் (நோடல் ஆஃபிஸர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications