ஜீன்ஸ் பேண்ட்.. அன்பிலுக்கு அருகே உதயநிதி.. நடுவே ஆர்.என் ரவி.. ஆஹா குரூப் போட்டோவில் கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு திமுக அரசின் 35வது அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்ட பின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது.

சரியாக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பு இன்றி அமைச்சராக செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு திமுக அரசின் 35வது அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்ட பின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. பொதுவாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது குழு புகைப்படம் எடுக்கப்படும். அமைச்சரவையில் புதிதாக அமைச்சர் சேர்க்கப்படும் போது அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அரசு புகைப்பட கருவூலத்தில் வைக்கவும், அதிகாரபூர்வ பக்கங்களில் பயன்படுத்தவும் இந்த புகைப்படம் எடுக்கப்படும்.

புகைப்படம்

புகைப்படம்

இந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கடைசி இடத்திற்கு முன்னால் அமர்ந்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் அருகிலேயே பின் பக்கம் அன்பில் மகேஷ் அமர்ந்து இருந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இதனால் இன்று இருவரும் அருகருகே புகைப்படத்திற்காக நின்றனர். உதயநிதி மட்டுமே இன்று ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி வந்து இருந்தார். பொதுவாக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்த போதெல்லாம் ஜீன்ஸ் பேண்ட்தான் அணிவார்.

வேட்டி சட்டை

வேட்டி சட்டை

அமைச்சரான பின் அவர் வேட்டி சட்டை அணிவாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் இன்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடிதான் வந்து இருந்தார். இந்த போட்டோவில் ஆளுநர் ஆர். என் ரவி நடுவில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகே முதல்வர் ஸ்டாலின், அதன்பின் மூத்த அமைச்சர்கள் அமர்ந்து இருந்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படும் என்று உறுதியாகி உள்ளது. இதற்காக அவருக்கு என்று அமைச்சரவை அறை உருவாக்கப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்தில் இரண்டாவது மாடியில் அவருக்கு என்று புதிய அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இவருக்கு வழங்கப்பட்டது அங்கு உள்ள போர்டில் இருந்து உறுதியாகி உள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

ராஜ்பவனில் நடக்கும் இந்த விழாவில் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட 500 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிகழ்ச்சிக்காக அழைப்பு சென்றுள்ளது. கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு சென்றுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்விற்கு வரவில்லை. இங்கே பதவி ஏற்பு முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின், அங்கே இருப்பவர்களிடம் ஆசி வாங்கினார். அவரிடம் சில நிமிடங்கள் பேசி வாழ்த்து பெற்றார். அதன்பின் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய அரசு கார் வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின் வழங்கப்படும் அரசு கார் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 10 மணிக்கு பின்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடம் செல்கிறார். அங்கு உதயநிதி ஸ்டாலின் இருவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வில் 500 தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 10.15 மணி அளவில் தலைமைச் செயலகத்திற்கு உதயநிதி ஸ்டாலின் செல்கிறார். அங்கு தனியாக அமைச்சராக கையெழுத்து போட்டு முறையாக பொறுபேற்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+