நாடு முழுக்க.. பல லட்சம் ஊழியர்களின் கனவு நிறைவேறுகிறது.. எத்தனை வருட கோரிக்கை.. ஹப்பா நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில் பென்சன் கம்யூட் செய்வதில் விதிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறதாம்.

தற்போது உள்ள மத்திய அரசு விதிப்படி அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் 15 வருடம் வேலை பார்த்தால் அதன்பின் பென்சன் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுக்க முடியும். 40 சதவிகிதத்திற்கும் குறைவாக பணத்தை எடுக்க முடியும்.

jobs pension

இதை 12 வருடங்களாக குறைக்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அரசு இதற்கான ஆலோசனைகளையும் செய்து வருகிறதாம்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கி, 14 கோரிக்கைகளை, ஜே.சி.எம் சார்பாக அதன் தலைவர் சிவ கோபால் மிஸ்ரா சமர்ப்பித்துள்ளார். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள 15 ஆண்டுகள் என்று கட்டுப்பாட்டில் இருந்து 12 ஆண்டுகளாக ஓய்வூதியம் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பது கோரிக்கை வைத்துள்ளது.

மாற்றம்; ஓய்வூதிய திட்டம்: நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதில் முக்கியமான வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆனால் இதை இன்னும் தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

புதிய பென்சன்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். வேறுபாடு என்ன? : தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

புதிய ரூல் : இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

ஒருவேளை இந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தலாம் என்ற திட்டத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+