ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை! பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண்! ஐகோர்ட் அதிரடி
Recommended Video

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுக்க தடை விதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாலிய புகார் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோல் பாலியல் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களை அடுத்த 8 வாரத்தில் ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. புகார் தெரிவித்த 24 மணி நேரத்தில், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் செயல் சட்டவிரோதம். எனவே அப்படி டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டியூன் எடுக்கும் ஆசிரியர்களை கண்டுபிடிப்பதற்காக தனியார் தொலைப்பேசி எண்கள் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications