Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலாவுக்கு ஒன்னும் தெரியாது.. முட்டாள்தனமான ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும்.. கோபமாக சாடிய சு.சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்ட மாற்றம் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முட்டாள்தனமாக ஜிஎஸ்டியை கொண்டு வந்து இருக்காங்க. ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். நிர்மலா சீதாராமனுக்கு ஒன்னுமே தெரியாது என்று சாடியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

nirmala sitharaman subramaniyan swamy gst


மேலும் கட்சியின் தலைமை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், யூடியூப் விவாதங்களிலும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.


இந்நிலையில் தான் சென்னை விமான நிலையம் வந்த சுப்பிரமணியன் சுவாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். சுப்பிரமணியன் சுவாமியிடம் பத்திரிகையாளர்கள், ‛‛நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ளது. அங்கு பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள். அம்பேத்கர் குறித்த அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக கூறப்படுவது, ராகுல் காந்தி தள்ளியதில் 2 பாஜக எம்பிக்களின் மண்டை உடைந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி சிரித்தபடி, ‛‛நாட்டில் இப்போது வேலையில்லாத திண்டாட்டம் நிறைய உள்ளது. சீனா நம் நாட்டுக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுகிறார்கள். அதுபற்றி யாருமே பேசுறது இல்லை. இது தலைமையின் தோல்வி. நாடாளுமன்றத்தில் அவர் இப்படி பேசினார். இவர் இப்படி பேசினார் என கூறுவதை தடுக்க கட்சியின் தலைவர்கள் தான் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் கட்டுப்பாடு இல்லை. அதுதான் பிரச்சனை’’ என்றார்.

இதையடுத்து ‛‛ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‛‛அதெல்லாம் இப்போதைக்கு வராது. கவலைப்படாதீர்கள்’’ என்று பதிலளித்தார். இந்த வேளையில் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வந்தது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, ‛‛ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். முட்டாள்தனமாக கொண்டு வந்து இருக்காங்க. நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது. அதிகாரிகள் எல்லாவற்றையும் முடித்து எழுதி கொடுப்பார்கள். அதை தான் பேசுவார்’’ என்று கூறினார்.

அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 18 % இருந்து 5% சதவீதமாக குறைக்கவும், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை வியாபாரிகளிடம் இருந்து வாங்கி விற்கும்போது வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜீன் தெரபி சிகிச்சைக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

முன்கூட்டியே பேக் செய்யப்பட்டோ அல்லது லேபில் இடப்படாமலோ, உப்பு மற்றும் மசாலா கலந்து வழங்கப்படும் பாப்கார்ன்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். முன்பே பேக் செய்யப்பட்டு லேபில் ஒட்டப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஸ்வீட் கேரமல் பாப்கார்ன் போன்ற, அதாவது பாப்கார்னின் இயல்பான சுவையை சர்க்கரை, கேரமல் சேர்த்து மாற்றி சுவை கூட்டியிருந்தால், அந்த வகை பாப்கார்ன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி பாப்கார்னுக்கே 5, 12, 18 சதவீத வரிகள் விதிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையானது. பல்வேறு தரப்பினர் இதனை விமர்சனம் செய்து வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமி ஜிஎஸ்டியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+